கிரேக்க கால குடியுரிமை


நவீன ஜனநாயக அரசுகளில் அனைத்து உறுப்பினர்களும் சமூகத்தின் உறுப்பினர்களாக இருப்பதுடன் அவர்கள் பிரஜைகளாக அடையாளப்படுத்தப்படுகின்றனர். ஆனால் புராதன கிரேக்கத்தில் சிறிய சிறிய அரசுகள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களைக் கொண்டுஇயங்கியதுடன் அரசியல் பங்கேற்பு என்பதும் வரயறுக்கப்பட்ட ஒன்றாக கானப்பட்டது. கிரேக்ககாலத்தில் குடியுரிமை என்பது மொத்த சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினருக்கு மத்திரமே வழங்கப்பட்டிருந்தது.
பெண்கள், அடிமைகள், கிராம நகர விவசாயிகள், ஊனமுற்றோர் மற்றும் பிறநாட்டவர்களுக்கு கிரேக்கக்காலத்தில் உரிமைகள் மறுக்கப்பட்டு பிரஜைகள் (குடியுரிமை) என்ற அந்தஸ்தும் வழங்கப்பட்டிருக்கவில்லை. இந்தவகையில் பிரஜைகள் என்போர் சமூகத்தில் வாழும் ஒரு பிரத்தியேகமான குழுவினை குறித்து நின்கின்றது.கிரேக்கக்கால குடியுரிமைக்கான தகுதிகள் எனப்பார்க்கும் போது
·
கிரேக்கத்தில்
பிறந்தவராக இருத்தல் வேண்டும்.
·
20
வயதைப் பூர்த்தி செய்த ஆண்மகனாக இருத்தல் வேண்டும்.
·
கல்வி, சொத்து பெற்றவராகவும் மற்றும் உயர் குழாத்தைச் சேர்ந்தவராகவும் இருத்தல் வேண்டும்.
·
அரசியல் விடயங்களில் (பொது வாழ்வில்) மும்முரமான ஈடுபாடு கொண்டவனாக இருத்தல் வேண்டும்.
இங்கு குடியுரிமை என்பது முன்னோர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்படும் ஒரு வரப்பிரசாதமாக இருந்ததுடன் அது தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமனம் பெற்ற அரசாங்க பதவிகளை வகிக்க அத்துடன் சமம்மிக்க சமூக உறுப்பினர்கள் என்ற வகையில் அரசியல் விவாதங்களில் பொதுவாக பங்கேற்கும் சுதந்திரமிக்க சுதேச ஆண்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்ட ஒரு முதன்மை ஸ்தானமாக காணப்பட்டது.
குடியுரிமை பெற்ற பிரஜைகள் மாத்திரமே சொத்துகளை வைத்திருப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கென பொது நிலங்களும் வழங்கப்பட்டிருந்தன. இத்தகைய பிரஜைகள் அடிமைகளை வைத்திருப்பதன் மூலம் பல பயன்களை பெற்றுக் கொண்டனர். அதாவது அடிமைகளை வைத்திருப்பவர்களுக்கே ஓய்வு நேரம் கிட்டும் அதன் மூலம் அவர்கள் பொது வேலைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வார்கள். அடிமைகள் தமது உழைப்பின் மூலம் நகர அரசுகளை விருத்தி செய்வார்கள். அதாவது விவசாய நடவடிக்கைகளின் மூலம் நகரை செழிப்புள்ளதாக்குவர். இக்காலத்தில் பெண்கள் வீட்டு வேலைகள் செய்வதற்கென மாத்திரம் ஒதுக்கப்பட்டவர்களாக காணப்பட்டனர். அதாவது பெண்கள் வீட்டு வேலைகளை முழுமையாக கவணித்துக் கொள்ளும் போதே அவ்வீட்டு தலைவனான ஆண்மகனுக்கு பொது வேலைகளில் ஈடுபடுவதற்கான நேரம் கிட்டும் என அக்காலத்தில் பரவலாக நம்பப்பட்டு வந்தது.

விமர்சனம்
கிரேக்க கால குடியுரிமை தத்துவமானது பெரும்பான்மை மக்களுக்கு குடியுரிமையை மறுத்துச் சிறுபான்மையினரின்
ஆட்சிக்குப் பெரும்பான்மை மக்களை உட்படுத்தியுள்ளது. இக் குடியுரிமை தத்துவம் சமுதாயத்தில், ஆளும் மிக சிலர் ஒருபுறமும் ஆளப்படும் மிகப்பலர் மறுபுறமும் எனச் சமமில்லாத இரு பகுதிகளை உருவாக்குகின்றது. அரசியலில் தீவிற ஈடுபாடு கொண்ட சிலரே குடியுரிமைப் பெறத்தகுதியுடையவர்களாகக் கருதப்பட்டனர் அந்தவகையில் சொத்துடையவர்களுக்கு மட்டுமே ஓய்வு நேரம் கிட்டும், ஓய்வு நேரம் உடையவர்களே அரசியலில் ஈடுபாடு காட்டமுடியும். எனவே சொத்துக்கள் இல்லாத பெரும்பன்மை மக்களுக்கு கிரேக்க காலத்தில் குடியுரிமை என்பது மறுக்கப்பட்டு அதன் மூலம் அவர்களுக்கான அரசியல் உரிமகளும் மறுக்கப்பட்டுள்ளன.
எனவே இக்கருத்து தற்கால தாராண்மை ஜனநாயகக் கோட்பாட்டிற்கு புறம்பாகவே அமைந்துள்ளது.
இன்று பல நாடுகளில் எந்தவிதபாகுபாடுகளும் பார்க்காமல் அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்பட்டு அவர்களுக்கான சமமான அரசியல், சமூக பொருளாதார உரிமைகள் சீராக வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சர்வஜன வாக்குரிமை குறிப்பிடத்தக்கவொன்றாகும்.
Posted by
Thiviya Mihirangani BA (Hons) Political Science
University of Peradeniya
No comments:
Post a Comment