குடியுரிமை எண்ணக்கருவின்
வரலாற்று வளர்ச்சிக் காலகட்டங்கள்

குடியுரிமையின் ஆரம்பகால தகுதியை நோக்கும் போது மனிதனை அரசியல் பிராணியாகவும் குடியுரிமையை ஆளுதல் மற்றும் ஆளப்படுவதற்கான ஆற்றல் என குறிப்பிட்டு இருந்தமையில் காணலாம். இதனை அடிப்படையாக கொண்டு பார்த்தோமானால் ஆரம்பகாலகட்டங்களில் சுதந்திரமிக்க சுதேச ஆண்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்ட ஒரு முதன்மை ஸ்தானத்தைக் குறித்து நின்றது. இதனால் குடியுரிமை என்பது முன்னோர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்படும் ஒரு வரப்பிரசாதமாக இருந்ததுடன் அது வாக்களிக்க, தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமனம் பெற்ற அரசாங்கப் பதவிகளை வகிக்க, சமமிக்க சமூக உறுப்பினர்கள் என்ற வகையில் அரசியல் விவாதங்களில் பொதுவாகப் பங்கேற்கும் உரிமைகளை உள்ளடக்கியது.

பிரான்சியப் புரட்சியை மத்திய காலத்தின் பிற்பகுதி மற்றும் நவீன காலத்தின் ஆரம்பத்தில் காணப்பட்ட செயலூக்கமற்ற குடியுரிமைக் கெதிரான ஒரு கிளர்ச்சியாக நோக்க முடியும். இப் புரட்சி முடியாட்சி மற்றும் பேரரசு கோரிக்கைகளுக்கு எதிராக செயலூக்கம்மிகு பங்கேற்பின் இலட்சியங்களுக்கு புத்துயிரளிக்க முயற்சித்தது. இப்புரட்சி பிரஜை என்பவன் சுதந்திரமும் சுயாதீனமும் மிக்க தனிமனிதன் எனும் முக்கிய அம்சத்தைஅறிமுகம் செய்தது. எனவே குடியுரிமமை பற்றிய நவீன கருத்தாக்கம் சுதந்திரமும் சமத்துவமுமிக்க பிரஜைகள் எனும் விடயத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
முதலாளித்துவம் மற்றும் தாராண்மைவாதத்தின் அபிவிருத்தியுடன் இனம், மதம், சாதி, பால் மாற்றும் வகுப்பு வேறுபாடின்றி பிரஜை ஆனவன் தனிமனித உரிமைகளைக் கொண்டுள்ள ஒருவன் எனும் கருத்து பலமடைந்தது. இந்த வகையில் நோக்கும் போது குடியுரிமை என்பது வேறுபாடுகளைக் கழைந்து ‘சமத்துவமிகு’ பிரஜைளை உருவாக்க ஏனைய அடையாளங்களை மூடிமறைக்கும் மிகப் பொதுவான அடையாளமாக உள்ளது.எனவே குடியுரிமை பல்வேறு காலகட்டங்களுக்கூடாக அபிவிருத்தியடைந்து வந்துள்ளது. அதாவது அதன் விளக்கம் எப்போதும் ஒன்றாக இராது குறிப்பிட்ட காலசூழ்நிலைக்கேற்ப மாற்றமடைந்து வந்துள்ளது.
Posted by
Thiviya Mihirangani BA (Hons) Political Science
University of Peradeniya
Posted by
Thiviya Mihirangani BA (Hons) Political Science
University of Peradeniya
No comments:
Post a Comment