நேட்டோவின் தோற்றம் மற்றும் வளர்ச்சி
நேட்டோ அரசு சார் பிராந்திய அமைப்பாகும். 4 ஏப்ரல் 1949 ஆம் ஆண்டு இரு வட அமெரிக்க மற்றும் பத்து மேற்கு ஐரோப்பிய நாடுகளினதும் (பெல்ஜியம், ஐஸ்லாந்து, இத்தாலி, டென்மார்க், பிரான்சு, போர்த்துக்கல், லக்சம்பேர்க், நோர்வே, நெதர்லாந்து, ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் கனடா, அமெரிக்கா) வெளிநாட்டு அமைச்சர்கள் வாஷிங்டன் நகரில் கூடி வட அத்திலாந்திக் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதன் மூலம் உருவாக்கப்பட்டது. தலைமையகம் பெல்ஜியத்தின் பிரசல்சில் உள்ளது. இது முழுக்க முழுக்க கூட்டுப்பாதுகாப்பை ஏற்படுத்துவதை நோக்காக கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு இராணுவ கூட்டணி அமைப்பாகும். தற்போது 28 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன. உத்தியோகப்பூர்வ மொழி : ஆங்கிலம் மற்றும் பிரேஞ்சு
அமைப்பு உருவாக காரணம் 1917ல் ரஷ்யப் புரட்சியின் பின்னர் அங்கு கம்யூனிச ஆட்சிமுறை ஸ்தாபிக்கபட்டதோடுஇ அதனை முழு உலகிலும் பரவச் செய்து தனது தலைமையை ஸ்தாபிக்க முனைந்தது. இதற்கு எதிராக முதலாளித்துவப் பொருளாதார நாடுகள் ஒன்றிணைய வேண்டி நேர்ந்தது. அத்துடன் மேற்கு பெர்லினுக்கு நாணய சீர்திருத்தத்தை மேற்கு நாடுகள் அறிமுகப்படுத்தியதால் 1948 ஜூன் 23 ஆம் திகதி மேற்கு பெர்லினுக்குள் பிரவேசிக்கும் அனைத்து வழிகளையும் அப்போது ரஷ்யாவின் தலைவராக இருந்த ஸ்ராலின் மூடிவிட்டார். இதன்போது மேற்கு பெர்லின் நகருக்கு உணவு, மருந்து போன்ற முக்கிய பொருட்களை கிழக்கு ஜேர்மனி ஊடாகக் கொண்டு செல்லும் புகையிரதப் பாதையூம் மூடப்பட்டது. ரஷ்யாவின் இந்நடவடிக்கைக்கு எதிராக முதலாளித்துவ அணி நாடுகள் ஒன்று சேர்ந்து NATO அமைப்பை உருவாக்கிக்கொண்டது. அத்தோடு 1949 ஆம் ஆண்டில் செயற்படுத்தப்பட்ட மார்ஷல் திட்டத்திற்கு, முதலாளித்துவ, ஜனநாயகக் கோட்பாடுகளைப் புதிதாக சுதந்திரம் பெற்ற நாடுகளில் ஏற்படுத்த தூண்டுதல் அளிப்பதற்கு NATO போன்ற அமைப்பு தேவைப்பட்டிருந்தது.
உருவாக்கப்பட்டதன் நோக்கம் “அமெரிக்க - ஐரோப்பிய அங்கத்துவ நாடுகளில் ஏதாவதொன்றின் மீது, எதிரி நாடொன்று தாக்குதல் நடத்துமாயின், அதனை அனைத்து அங்கத்துவ நாடுகள் மீதும் நடத்தப்பட்டதாகக் கருதிச் செயற்படுவோம்” - நேட்டோ ஒப்பந்தத்தின் 5 வது வாசகம். ஐக்கிய அமெரிக்கா உட்பட முதலாளித்துவ அணியின் பலத்தைப் பாதுகாத்துக் கொள்வதே இவ்வமைப்பின் பிரதான நோக்கமாகும். வருடாந்த வரவு - செலவூத் திட்டத்தில் 20 வீதத்திற்கு மேற்பட்ட தொகையைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகச் செலவிடுகின்றது. ஐக்கிய அமெரிக்கா முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கையையூம் ஜனநாயக ஆட்சி முறையையூம் பரப்புவதற்காக நேட்டோவைப் பயன்படுத்துகிறது.
தற்போதைய உறுப்பு நாடுகள் : ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், துருக்கி, ஸ்பெயின், சுலோவீனியா, சிலோவாக்கியா ருமேனியா, போர்த்துக்கல், நெதர்லாந்து, நோர்வே, போலந்து, லக்சம்பர்க், லித்துவேனியா, லத்வியா, இத்தாலி, பல்கேரியா, டென்மார்க், எஸ்தோனியா, பிரான்ஸ், ஜேர்மனி, ஹங்கேரி, ஐஸ்லாந்து, செக் குடியரசு, கிரீஸ், பெல்ஜியம், அல்பேனியா, கனடா, குரோடியா
NATO வின்; இரு முக்கிய கட்டமைப்புகள் அரசியல் கட்டமைப்பு, இராணுவ கட்டமைப்பு ஆகும், அரசியல் கட்டமைப்பிற்கு NATO வின் பொதுச் செயலாளர் தலைமை தாங்குவார். இதில் பங்குகொள்ள ஒவ்வொரு நாடும் நிரந்தர உறுப்பினராக தனது மூத்த பிரதிநிதியை அனுப்பி வைக்கும். இதன் தலைமையகம் பிரசல்ஸில் உள்ளது. இதன் தீர்மானங்கள் வாரத்திற்கு ஒரு முறை கூடும் வட அத்திலாந்திக் கவூன்ஸிலில் மேற்கொள்ளப்படும். இராணுவ கட்டமைப்பிற்கு இராணுவபடை தளபதி தலைமை தாங்குவார். அத்தோடு ஒவ்வொரு நாடும் தமது மூத்த இராணுவ அதிகாரிகளை இதற்கு அனுப்பி வைக்கும்.
1950 கொரியப் போர், இதனைத் தொடர்ந்து இரண்டு ஐக்கிய அமெரிக்கத் தளபதிகளின் கீழ் ஒன்றிணைந்த படைக் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. 1952 கிரீஸ் மற்றும் துருக்கி நேட்டோவில் இணைந்தது. 1955 வோர்சோ ஒப்பந்தம் நிறுவப்பட்டது. நேட்டோ அணியிலிருந்து எதிர்நோக்கும் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்க கிழக்கைரோப்பிய பொது உடைமைவாத நாடுகளான கிழக்கு ஜேர்மனி, போலந்து, ஹங்கேரி, செக்கோஸ்லோவாக்கியா, ருமேனியா, பல்கேரியா எனும் நாடுகளை இணைத்து ரஷ்யா மே 11இல் போலந்தின் தலைநகரான வோர்ஸோவில் ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்திட்டு “வோர்ஸோ அணியை” உருவாக்கியது. 1956 சுயெஸ் கால்வாய் நெருக்கடி, ஹங்கேரிய புரட்சி. 1958 உரோம் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டமை மற்றும் ஐரோப்பிய பொருளாதார சமூகத்தின் உருவாக்கம். 1961 பேர்லின் சுவர் கட்டப்பட்டமை. 1962 கியூபாவின் ஏவூகணை பிரச்சினை. 1966 பிரான்ஸ் நாட்டோவின் இராணுவக் கட்டமைப்பிலிருந்து விலகி அணுவாயூதத் திட்டத்தை உருவாக்கியது. 1969 அப்பலோ 11: முதல் மனிதன் சந்திரனில் தடம் பதித்தமை. 1973 எண்ணெய் நெருக்கடி. 1970 –
1980 நேட்டோ குளிர் யூத்த காலம் முழுவதும் ஆக்கிரமிப்புக்களை தடுக்க தயாராகியதுடன் பயிற்சி பெற்றது. 1979 இரண்டாவது எண்ணெய் நெருக்கடிஇ சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானை முற்றுகையிட்டமை. 1982 ஸ்பெய்ன் நேட்டோவில் இணைந்தது. 1989 சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியதுஇ மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா முழுவதும் புரட்சி பரவியது (பேர்லின் சுவர் உடைக்கப்பட்டது). 1990 மீண்டும் ஜேர்மன் ஒன்றிணைக்கப்பட்டது. 1991 சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி மற்றும் வோர்சோ ஒப்பந்தம் கலைக்கப்பட்டது. நேட்டோவூம் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஒத்துழைப்புடன் செயற்பட ஆரம்பிதன. குளிர் யூத்த காலத்து நேட்டோவின் மூலோபாய கருத்தாக்கங்கள் புத்தகமாக வெளியிடப்பட்டது. 1993 நேட்டோ பொசோனியா மற்றும் ஹேர்ச்கோவேனியாவிற்கு வான்வெளி தடை விதித்தது. 1994 நேட்டோ சமாதான திட்டம் மற்றும் மத்தியஸ்தப்பேச்சுவார்த்தைகளை நடாத்த ஒரு கூட்டுறவை நிறுவியது. 1997 நேட்டோ மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான ஸ்தாபக செயல் ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டமைஇ நேட்டோ மற்றும் உக்ரேனுக்கு இடையேயான சாசனம் கையொப்பமிடப்பட்டது. 1999 செக் குடியரசுஇ ஹங்கேரி மற்றும் போலாந்து நேட்டோவில் இணைந்தது. மேலும் கொசோவாவில் நிகழ்ந்த மனிதாபிமான பேரழிவை தடுக்க கூட்டுநடவடிக்கை எடுத்தது. 2000 ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் நேட்டோவிற்குமிடையிலான உத்தியோகப்பூர்வ கூட்டம் இடம்பெற்றமை 2001 அமெரிக்காவில் பயங்கரவாதத் தாக்கம் 9ஃ11இ நேட்டோ வரலாற்றில் முதல் முறையாக அதன் 5 ஆம் வாசகம் செயல்படுத்தப்பட்டது, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை தீர்மானம் 1386 (UNSCR 1386) கீழ் ஆப்கானிஸ்தானிற்கு சர்வதேச பாதுகாப்பு உதவி படை அனுப்பப்பட்டது. 2002 நேட்டோ ரஷ்ய கவூன்சில் உருவாக்கப்பட்டது. 2004 பல்கேரியா, எஸ்தோனியா, லட்வியா, லிதுவேனியா, ரோமானியா, சிலோவாகியா மற்றும் சிலோவெனியா நேட்டோவில் இணைந்தனஇ, நேட்டோ ஈராக்கில் இராணுவ பயிற்சி பணியை ஆரம்பித்தது 2005 லண்டனில் பயங்கரவாத தாக்குதல் 2009 Strasbourg - kehl உச்சிமாநாட்டில் மீண்டும் பிரான்சு நேட்டோவின் இராணுவக் கட்டமைப்பில் இணைந்தது, அல்பெனியா மற்றும் குரோடியா நேட்டோவில் இணைந்தது. 2010 நேட்டோ புதிய மூலோபாய கருத்தாக்கத்தை கைகொண்டதுஇ ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியூம் நேட்டோவின் பொது செயலாளரும் நீண்டகால கூட்டுறவூ அறிக்கையில் கையொப்பமிட்டனர். 2011 அரபு வசந்தம். 2013 உக்ரேனில் எதிர்ப்புக்கள் மேலோங்கியது. 2014 NATO வளர்ந்து வரும் புதிய சவால்களுக்கு முகங்கொடுக்க WALES மாநாட்டில் தயார் நடவடிக்கை திட்டங்களை ஏற்றுக்கொண்டது. 2015 பாரிஸ்இ பிரசில்ஸ், அன்காரா போன்ற இடங்களில் பயங்கரவாத தாக்குதல், ஐரோப்பாவில் புலம்பேர் அகதிகளின் நெருக்கடி போன்றவற்றைக் குரிப்பிடலாம்.
Posted by
Thiviya Mihirangani BA (Hons) Political Science
University of Peradeniya