type in English

Sunday, October 8, 2017

Approach to international relations


சர்வதேச அரசியலுக்கான அணுகுமுறைகள்

சர்வதேச அரசியல் கற்கை தொடர்பாக பல அரசியல் அறிஞர்கள் பல்வேறுபட்ட கருத்துக்களையும், அதற்கான அணுகுமுறைகளையும் குறிப்பிட்டு உள்ளனர். எனினும் அவை காலமாற்றங்களுக்கு ஏற்ப மாற்றமடைந்து வந்துள்ளன. சர்வதேச அரசியல் தொடராக பல அணுகுமுறைகள் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. ஆரம்ப காலத்தில் அதாவது கிரேக்க காலத்தில் பிளேட்டோ அதன் பிற்பட்ட காலத்தில் கன்பியூஸ் (Confivce), கௌடிலியர் போன்றோரால் பல அணுகுமுறைகள் முன்வைக்கப்பட்டன.
குயின்சி ரைட் (Quincey Right) சர்வதேச அரசியல் கற்கையில் 23 அணுகுமுறைகள் பின்பற்றப்படுகின்றன எனவும், பார்மா மற்றும் பேர்கின்ஸ் (Palmer & Perkins) போன்றோர் 7 அணுகுமுறைகள் உள்ளதாகவும்போர்டன் சுபியா (Boton Supiea) 27 அணுகுமுறைகளை விளக்கியுள்ளார்.
 ஹெட்லி புல் (Hedley Bull) குறிப்பிடுவது போல் சர்வதேச அரசியல் எனப்படும் போது அதற்கான இரண்டு முக்கிய அணுகுமுறைகள் எமது கவனத்திற்குட்படுகின்றது. ஒன்று சட்டம், வரலாறு, மெய்யியல் துறைகளிலிருந்து பெறப்பட்ட பாரம்பரிய அல்லது மரபுசார் அணுகுமுறை மற்றையது விஞ்ஞான அணுகுமுறையாகும். இது கணித அல்லது அளவையியல் ரீதியான ஆதாரங்களுடன் சர்வதேச அரசியலை ஆய்வு செய்யும் ஒன்றாகக் காணப்படுகின்றது.
பாரம்பரிய அல்லது மரபுசார் அணுகுமுறை எனப்படும் போது அதில் வரலாற்று அணுகுமுறை மற்றும் தத்துவார்த்த அணுகுமுறை என்பனக் காணப்படும். இதில் தத்துவார்த்த அணுகுமுறைக்குள் யதார்த்தவாதப்பள்ளி (அணுகுமுறை) மற்றும்  இலட்சியவாதப்பள்ளி என்பன இடம் பெருகின்றன. யதார்த்தவாத அணுகுமுறையானது சகல அரசுகளுக்கிடையிலுமான அதிகாரப் போராட்டத்தினைக் கருத்திற் கொள்ளும் போது, இலட்சியவாத அணுகு முறையானது ஒழுக்கவியலை வலியுறுத்துமொன்றாக காணப்படுகின்றது.
விஞ்ஞான அணுகுமுறைகள் எனப்பார்கும் போது இதனுள் முறைமை அணுகுமுறை மற்றும் கொள்கை விஞ்ஞான அணுகுமுறைகள் என்னும் இரு பெரும் பிரிவுகள் காணப்படுகின்றன. இதில் முறைமை அணுகுமுறைக்குள் வலுச்சமநிலை அணுகுமுறை, சார்பு ரீதியான சமநிலை அணுகுமுறை, இருதுருவ முறைமை அணுகுமுறை மற்றும் மோர்டன் கப்ளனின் சர்வதேச அரசியல் தொடர்பான ஆறு மாதிரிகள் என்பனவும், கொள்கை விஞ்ஞான அணுகுமுறைக்குள் நடத்தைவாத அணுகுமுறை, விளையாட்டு அணுகுமுறை, பேரம் பேசுதல் அணுகுமுறை, தொடர்பாடல் அணுகுமுறை, தந்திரோபாய அணுகுமுறை, அதிகாரச்சமநிலை அணுகுமுறை மற்றும் தீர்மானம் எடுத்தல் அணுகுமுறை என்பன உள்ளடங்கும். இவ்வாறு காணப்படுகின்ற பல்வேறுப்பட்ட அணுகுமுறைகள் ஒவ்வொன்றைப் பற்றியும் சுருக்கமாக நோக்குவோம்.



1.1  வரலாற்று அணுகுமுறை

வரலாற்று அணுகுமுறை எனப்படும் போது இது பிரதானமாக இராஜதந்திர வரலாற்றினை வலியுறுத்தி நிற்கும் ஒன்றாக காணப்படுகின்றது. சமகால அரசியலானது இறந்தகால நிகழ்வுகளாகும் என இவ் அணுகுமுறை குறிப்பிடுகின்றது. இறந்தகால உறவுகள் மற்றும் மோதல்கள் என்பவற்றின் அடிப்படையிலும், அதன் எதிர் செயற்பாட்டிலும் ஈடுபடுகின்றது. இவ் அனுகுமுறையின் இராஜதந்திர ஆய்விலிராஜதந்திரங்களின் வெற்றி, தோல்வி கடந்த கால மோதல்களுக்கான காரணிகள் என்பவற்றை கண்டு பிடிப்பதுடன் குழு மற்றும் பொதுமக்கள் நலனை கருத்திற் கொண்டு கொள்கைகள் எவ்வாறு உருவாக்கப்படுதல் வேண்டும் என்பதனை தெளிவுபடுத்த உதவுகிறது.
ஆனால் இவ்வணுகுமுறையின் பிரயோகம் தீர்மானம் எடுத்தலை தவறாக பாதிக்கச் செய்வதுடன் அராசியலில் ஆபத்தையும் கொண்டுவரக் கூடியது. அத்தோடு கடந்த காலம் பற்றிய தகவல்களை திரட்டிக் கொள்வதில் மட்டுமே உதவி புரிகின்றது.

      1.2  தத்துவார்த்த அணுகுமுறை
தத்துவார்த்த அணுகுமுறை முதலில் மனித இயல்பு பற்றி ஆய்வு செய்கின்றதுடன் அதன் ஊடாக சர்வதேச அரசியலை விளக்க முயற்சிக்கின்றது.
யதார்த்தவாத அணுகுமுறை : சர்வதேச அரசியலை அவை உள்ளவாரே ஆராய்கின்றது. இது நிகழ்வுகளை ஆய்வுசெய்வதில் முன் கூட்டி எண்ணம் கொண்ட கருத்துக்களையோ அல்லது கருத்தாக்கங்களையோ அடிப்படையாகக் கொள்வதில்லை. இவ் அணுகுமுறை ஆதரவாளர்கள் சர்வதேச அரசியல் அடிப்படையான காரணி அதிகாரமாக உள்ளதை ஏற்றுக் கொள்வதுடன் ஒவ்வொரு அரசும் அதன் இலக்குகளை அடைந்து கொள்ள தனக்கு முடியுமான எந்த ஒரு வழிமுறையையும் பயன்படுத்துகின்றது என்பதனையும் அங்கிகரிக்கின்றது.
இலட்சியவாத அணுகுமுறை : இது 2ம் உலகப் போருக்கு இடைப்பட்ட காலத்தில் அமெரிக்காவில் செல்வாக்கு செலுத்திய தாரான்மைவாதத்தின் வினாவாகும். வூட்றோவில்சன், ரசல் ஆகியோர் இவ் அணுகுமுறையின் முக்கிய ஆதரவாளர்களாக கருதப்படுகின்றனர்.

1.3  முறைமப்பகுப்பாய்வு அணுகுமுறை

விஞ்ஞான அணுகுமுறைகளுக்குள் காணப்படும் முறைமப்பகுப்பாய்வு அண்மைக் காலத்திலேயே சர்வதேச அரசியலைக் கற்பதற்கான ஒரு அணுகுமுறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இவ் அணுகுமுறையில் இடைவினை செயன்முறையின் விளைவாக உருவாகும், சிக்கலான உறவு புறவமைப்பில் தேசங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக இருக்க வேண்டும் எனப்படுகின்றது. இறைமை அரசை உள்ளடக்கிய உலகானது ஓர் முறைமை ஆகும் இவ் அணுகுமுறையானது அரசுகளின் நடத்தைகளில் கவனம் செலுத்துகின்றது. அரசுகளின் இடை வினையில் சில ஒழுங்குமுறைகளும் ஒரு சீரான தன்மையும் காணப்படுகின்றன எனக் கோட்பாட்டாளர்கள் கருதுகின்றனர்.  முறைமை என்ற எண்ணக்கரு, சர்வதேச உறவுக் கோட்பாடுகள் அதன் நடைமுறை ஆய்வுகள் ஆகிய இரண்டிற்கும் பயன்படக் கூடிய அடிப்படை அம்சங்களைக் கொடுத்திருக்கின்றது. சர்வதேச முறைமைகள் என்பது சர்வதேச அரசியலின் அடிப்படைப் பகுதிகளுக்கு இடையிலான உறவு முறையாகும்
மோர்ட்டன் கப்லன் (Morton Kaplan) என்பவர் சர்வதேச முறைமையினைப் பின்வரும் அலகுகளினூடாக இனம் காட்டுகின்றார்.
1.   அதிகாரச்சமனிலை முறைமை
2.   தளர்சியான இருதுருவமுறைமை
3.   இறுக்கமான இருதுருவமுறைமை
4.   பூகோளமுறைமை
5.   படிமுறையிலானமுறைமை
6.   வீற்ரோ முறைமை
அதிகாரச்சமநிலை முறைமை : செயற்பட்ட காலத்தில் சர்வதேச பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய நடுவர் ஒருவர் காணப்படவில்லை. பிராந்திய நிறுவனங்களோ சர்வதேச நிறுவனங்களோ காணப்படாத அக் காலத்தில் UK, Spain, Portucal, Ostriya போன்ற பிரதான அரசியல் சக்திகள் காணப்பட்டன. அச் சக்திகளின் அமைவு மட்டமும், மாற்றங்களும் நலன்களுக்கேற்ப ஒழுங்கமைகின்றன. இவற்றுக்கிடையில் வரையறுக்கப்பட்ட போர்கள் இடம் பெற்றாலும் அவை மகாயுத்தங்களாக மாறவில்லை.
தளர்ச்சியான இருதுருவ முறைமை : (Cold War model) 1947 – 1990 வரை கெடுபிடிப் போர் நடைமுறையில் காணப்பட்ட முறைமையே தளர்ச்சியான இருதுருவ முறைமையாகும். இவ் மாதிரியில் உலகில் இரு பிரதான வல்லரசுகள் இருக்கின்றன என்றும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு இரு முகாம்கள் இருக்கின்றன என்றும் கூறுகின்றது. ஒவ்வொரு வல்லரசும் தமது முகாம்களின் பாதுகாவலர்களாக செயற்பட்டன இவ்  மாதிரி அணி சேரா நாடுகளையும் கொண்ட 03 சக்திகளைக் கொண்டிருந்தது. பிரதான வல்லரசுகளின் அமைவானது பல அரசாங்க முறைகளினையும், பல சமுதாய பொருளாதார அமைப்புக்களையும் கொண்டு நிறுவன ரீதியாக ஒழுங்கமைந்து காணப்பட்டது.
படிமுறைமையிலான முறைமை : இதில் ஏதேனும் ஒரு நாடு மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாக காணப்படுவதுடன் ஏனைய அரசுகள் கிட்டத்தட்ட இவ் உச்ச அதிகாரம் கொண்ட அரசின் ஆணைக்குட்படும். இந்நிலையை துருவ உலக மாதிரியாக விவரிக்கலாம். இதற்கு உதாரணமாக ஐக்கிய நாடுகளைக் குறிப்பிடலாம். ஆனால் இவ் அமைப்பு கூட போதிய அதிகாரத்தை கொண்டிருப்பதாக கருத முடியாது.
வீற்ரோ முறைமை : இது ஆரம்பத்தில் தோமஸ் ஹொப்ஸ் குறிப்பிட்டிருந்ததைப் போன்று இயற்கை அரசுகளை ஒத்து நிற்கின்றது. ஒவ்வொரு அரசுகளும் ஏனைய அரசுகளின் எதிரிகளாகவே காணாப்படும். ஏனெனில் பெரும்பாலும் எல்லா அரசுகளும் அணு ஆயுதங்களை தம்வசம் பதுக்கி வைத்திருப்பார்கள். இதனால் தமது எதிரியாக கருதும் அரசுகளுக்கு எதிராக தமது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும்.
இம்முறைகளை விட ஏனைய சர்வதேச உப முறைமைகள், சர்வதேச அந்தஸ்த்துக் குறைந்த அரச முறைகள் என்பன புவியியல் பிராந்தியங்களை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சியடைந்த அரசியல் பகுதிகளைக் குறிப்பதாகும். மைக்கல் ஹெஸ் (Michael Haas) என்பவர் சர்வதேச உப முறைமையினை 20 பகுதிகளாகப் பிரித்து இனம் காட்டியுள்ளார். இவற்றில் 1649ஆம் ஆண்டிலிருந்;து 1963ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட 10 ஐரோப்பிய பகுதிகளையும், 1689ஆம் ஆண்டிலிருந்;து 1964 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட 06 ஆசியப்பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தார். சர்வதேச அந்தஸ்த்துக் குறைந்த அரச முறைமைகளுக்குள் தென்னாசியாவினை உள்ளடக்கியிருந்தார். இதே வகையான ஆய்வு முறையினை மேற்கொண்டிருந்த லியோனாட் பயின்டர் (Leonard Binder) மத்திய கிழக்கினை அந்தஸ்த்துக் குறைந்த சர்வதேச அரச முறைமைக்குள் உள்ளடக்கியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

1.4  கொள்கை விஞ்ஞான அணுகுமுறைகள்

கொள்கை விஞ்ஞான அணுகுமுறையானது நடத்தைவாதம், விளையாட்டு கோட்பாட்டு, பேரம் பேசுதல், தீர்மானம் எடுத்தல் போன்ற அணுகுமுறைகளை உள்ளடக்கியுள்ளது.
நடத்தைவாதம் அணுகுமுறை : இது அமெரிக்காவில் மிக வேகமாக பிரபல்யம் அடைந்தவொன்றாகும். சிக்காகோ பல்கலைகழகத்தின் சிந்தனாவாத குழுவின் மாற்றமுறும் சமூக கட்டமைவையும், அதிகாரப்பங்கீட்டையும் பரிசீலனை செய்யும் ஒன்று என்ற வகையில் மானிடவியல், சமூகவியல், உளவியல் துறைகளில் பிரயோகிப்பதுடன் அரசியல் விஞ்ஞானதுறையிலும் பிரயோகிக்கப்படுகின்றது.
நடத்தைவாதம் அணுகுமுறை சர்வதேச அரசியலின் அனுகுமுறைகளில் நடத்தைவாதம் மிக குறுகிய காலத்தில் கூடுதலாகப் பயன்படுத்தப்படுகின்றது. இது சர்வதேச  அரசியலில் இடைவினையைப் பற்றி நிச்சயமாக கூறமுடியவில்லையானாலும், கோட்பாட்டு மாதிரியை உருவாக்குவதில் பங்களிப்பு செலுத்துகிறது. Harold Lasswell, Sigmond Neumenu, Amithai, Edioni மற்றும் Eva Edioni போன்றோரின் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நடத்தைவாத அணுகுமுறையினை ஆய்வாளர்கள் விளக்குகின்றனர். இதில் அரசியலில் ஈடுபடும் மனிதர்களின் நடத்தை ஆரய்வதினால் சிறந்தவர்களை இனங்காண முடிவதுடன் கடினமான விடயங்கள் ஆரயப்பட்டு தெளிவான முடிவுகள் பெறப்படுகின்றன. ஏனைய கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்வதால் இதற்கான தனியொரு கோட்பாடு அமையவில்லை எனின் சீரான தகவல்களைப் பெற கடினமாக உள்ளமை இதன் குறைபாடாகும்.
விளையாட்டுக் கோட்பாட்டு அணுகுமுறை :  சர்வதேச அரசியல் என்பது ஒரு விளையாட்டு என அடிக்கடி வர்ணிக்கப்படுகின்றது. இவ் அணுகுமுறை கொள்கை விஞ்ஞான அணுகுமுறையின் ஒரு பகுதியாகும். சட்டங்கள் அடிக்கடி மாற்றப்படுவதையும் சில நேரம் வெளிப்படையாக ஒரு அரசு அன்னோர் அரசினை ஆக்கிரமிப்பதையும் பொதுவாக அவதானிக்கவும் அறியவும் முடிகிறது. விளையாட்டுக்கோட்பாடு உலக அரசியலைக் கற்பதற்கான மாதிடியைக் கொடுப்பதற்கு எத்தனிக்கின்றது. சமூக விஞ்ஞானங்களில் இருக்கின்ற அனேக துறைகளின் இயல்புகளுக்கேற்ப இக் கோட்பாடு மாற்றப்பட்டு பிரயோகிக்கப்பட்டு வந்தன. இவ்வகையில் எல்லாதுறைகளையும் போன்றே  சர்வதேச அரசியலும் கோட்பாட்டு அடிப்படையிலே சிந்திக்கப்பட்டு வந்திருந்தது. ஆனால் Morton Kaplan என்பவர்அனேக பிரச்சினைகளையுடைய சர்வதேச அரசியலில் இது மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே பிரயோகிக்கத் தகுதியுடையது. வழமையான அனேக விளையாட்டுக்கள் முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றன. ஆனால் சர்வதேச அரசியல் முடிவில்லாத விளையாட்டை ஒத்திருக்கின்றது இங்கு விளையட்டை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஏற்ற வல்லரசுகள் இருக்கவில்லைஎன்று கூறுகின்றார்.

பேரம் பேசுதல் அணுகுமுறை : இவ்வணுகுமுறை சர்வதேச அரசியலில் உள்ள உறவுகளில் உள்ள பிணக்குகளை அமைதியான முறையில் தீர்ப்பது முக்கியமானது என்ற வகையில் பேச்சுவார்த்தையை வலியுறுத்துகின்றது. Thomas Shelling, Aurthur Leaborn, Joshep Nuget போன்றோர் இக் கோட்பட்டை அபிவிருத்தி செய்தவர்களாவர். அரசு சில முன்னுரிமைகளைக் கொண்டுள்ளது. அவை அவற்றை ஏனைய அரசுகளின் மீது திணிக்கின்றன. இம் முன்னுரிமை உபாயம், பேச்சு வார்த்தை மேடையில் இடம் பெறுகின்றன.
எவ்வகையான சூழ்நிலை இருப்பு, அதன் தன்மை என்பது தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுபவர்கள் முன்னுரிமை இருப்பு தொடர்ந்திருக்க வேண்டும். அரைகுறை பேச்சுவார்த்தைப் பற்றிய எண்ணக்கருவை உடையோரின் கருத்தில் பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பினரும் தோல்வியுறாது பேச்சுவார்த்தையில் அடம் பிடிக்காத ஒரு முறையே இதுவாகும். ஆகவே அரசு பரந்த மக்கள் வேண்டுகோளிற்கு உற்படும் பிரச்சினைகளுடன் கூடிய ஓர் உபாயத்தைக் கொண்டிருக்கின்றன.
இம்முறைமூலம் கிட்டும் நன்மைகள் என்னவெனில் இது பேச்சுவார்த்தையை வலியுறுத்துவதினால் இங்கு போருக்கு அனுமதியில்லை ஆகவே சொத்து, பொருள், உயிர் சேதங்களை தவிர்க முடியும், அமைதியையும் ஒற்றுமையையும் பேண முடியும். இருதரப்பு பேச்சுவார்த்தைகளும் நீண்டு கொண்டு செல்லும் போது கால தாமதம் மற்றும் கால வீண்விரயம் ஏற்படுதல், அதோடு இம்முறையில் அதிகமான கேள்விகள் காணப்படுமே தவிர அவற்றிற்கான விடைகளைக் காண்பதில் அதிகம் அலட்சிய நிலை காணப்படுதல் போன்றன இவ் அணுகுமுறையின் குறைபாடுகளாகும்.
தொடர்பாடல் கோட்பாடு : இக் கோட்பாடும் கொள்கை விஞ்ஞான அணுகுமுறையின் ஒரு பகுதியாகும். இக் கோட்பாடானது புரட்சிகரத் தொடர்பாடல் என்ற கருத்தில் அமைதியை கொடுப்பதற்கு எத்தனித்தது. உலகத்தின் எல்லாப் பகுதிகளிலும் இயற்கையான மனித உறவையும், சமூக உறவையும் பரந்த அடிப்படையில் கூடிய தரத்திற்கு மாற்றியது. இது மனித நடத்தையினையும் உலக விவகாரங்களையும் ஊடறுத்துச் செல்லத் தொடங்கியது.
ஏனைய மனித முயற்சிகளைப் போல தொடர்பாடலின் முன்னேற்றமும், சர்வதேச அரசியலில் பரந்த பலன் கொடுப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது. தொழில்நுட்ப திறமைகள், எண்ணங்கள், தகவல்கள் என்பவற்றைப் பரிமாறிக் கொள்வதற்கான நுட்பத்தினையும் மிகவும் நெருக்கமான தொடர்பினை மக்களிடையேயும், நாடுகளிடையேயும் தொடர்பாடல் கொடுத்திருந்தது.
நடைமுறை முக்கியத்துவத்தை அதிகக்ப்படுத்துவதாக இவ் அணுகுமுறைகள் காணப்பட்டாலும் குறிப்பாக வரலாறு, அரசியல், விஞ்ஞானம், சட்டம், பொருளாதாரம் போன்ற கல்விசார் துறைகளினூடாக சர்வதேச உறவு பற்றிய துறையியல் அரசியல், புவியியல், சர்வதேச ஒழுங்கமைப்புக்கள், சர்வதேச நிறுவனங்கள் போன்ற அனேக விடயங்களுடன் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

மேற்கூறப்பட்ட பல்வேறுபட்ட அணுகுமுறைகளும் சர்வதேச அரசியலைக் கற்ப்பதற்கான சிறந்த அணுகுமுறைகளாகும். இவ் அணுகுமுறைகளை தவிற மேலும் பல அணுகுமுறைகள் சர்வதேச அரசியலின் ஆய்வில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவை மேற்குறிப்பிட்ட பல அணுகுமுறைகள் அளவிற்கு பெருமளவில் பேசப்படுவதில்லை. இனி நாம் ததுவார்த்த அணுகுமுறயின் இரு பிரிவுகளான இலட்சியவாத அணுகுமுறை மற்றும் யதார்த்தவாத அணுகுமுறை பற்றி விரிவாகப் பார்ப்போம். continue.. 


Posted by
Thiviya Mihirangani BA (Hons) Political Science 
University of Peradeniya

Reference....
கணேசலிங்கம்கேரீ. (2010) சர்வதேச அரசியல் சில பார்வைகள், கொழும்பு – 11 : சேமமடு பதிப்பகம்.

தனபாலசிங்கம் கிருஷ்ணமோகன் (2010) அரசியல் விஞ்ஞானம் : அரசியல் செயற்பாடும்அரச்சியல் செயல்முறையும்கொழும்பு - 11: சேமமடு பதிப்பகம்.

Robert M.A. Crawford, (2000) Idealism and Realism in International Relations, London  :  Routledge

http://www.zeepedia.com/read.php%3Fapproaches_to_international_relations_traditional_approach_international_relations_ir%26b%3D100%26c%3D3


http://www.yourarticlelibrary.com/category/international-politics/

No comments:

Post a Comment

NATO

நேட்டோவின் தோற்றம் மற்றும் வளர்ச்சி   நேட்டோ அரசு சார் பிராந்திய அமைப்பாகும் . 4 ஏப்ரல் 1949 ஆம் ஆண்டு இரு வட அமெரிக்க மற்றும...