சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்பு
சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகப்பு எனப்படுவது அரசுகளாலும் சர்வதேச நிறுவனங்களாலும் பரஸ்பர தங்குநிலையையும் பாதுகாப்பினையும் உறுதி செய்துகொள்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளேயாகும். இந் நடவடிக்கைகளுல் இராணு நடவடிகைகள் மற்றும் ஒப்பந்தங்கள் மாநாடுகள் போன்ற இராஜதந்திர ஒப்பந்தங்கள் என்பன உள்ளடங்கும். சர்வதேச பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பும் நெருங்கிய தொடர்பினை கொண்டதாகும். அதாவது சர்வதேச பாதுகாப்பு என்பது உலக அரங்கில் தேசங்களின் அல்லது மாநிலங்களின் பாதுகாப்பேயாகும். இரண்டாம் உலகமகா யுத்தம் முடிவுக்கு கொண்டுவந்ததை தொடர்ந்து, சர்வதேச பாதுகாப்பு எனும் புதிய பாடப்பரப்பு கற்கைநெறிக்குள் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது. இது சர்வதேச உறவுகளின் ஒரு துணைத்துறையாக கற்பிக்கப்பட்டு வந்ததுடன் இன்று ஒரு தனியான கற்கைத்துறையாக வளர்ச்சி பெற்று வந்துள்ளது. 1950 ஆகும் போது சர்வதேச பாதுகாப்பு எனும் பாடப்பரப்பு, சர்வதேச உறவு கற்கை நெறியின் மையப்புள்ளியாக கருதப்பட்டது. இதன் முக்கிய கூறுகளாக பாதுகாப்பு ஆய்வுகள், இராஜதந்திர ஆய்வுகள் மற்றும் சமாதான ஆய்வுகள் போன்றவை காணப்பட்டன.பொதுவாக “பாதுகாப்பு” அல்லது “சமாதானம்” என்பதன் பொருளானது வரையறுக்கப்படாத ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. சர்வதேச பாதுகாப்பு பாடப்பரப்பின் உள்ளடக்கமானது பல வருடங்களுக்கு முன்னமே விரிவடைந்துள்ளது. இன்று இதனுள் உலக இருப்பினை பாதிக்கக்கூடிய அதனுடன் தொடர்புபட்ட அனைத்து விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இன்று சர்வதேச பாதுகாப்பு என்பது மரபார்ந்த அல்லது பாரம்பரிய இராணுவ பலத்தினால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து வேறுபட்டு, நாடுகளுக்கிடையிலான போர் அல்லது முரண்பாடுகளானது, பொருளாதார வலிமையினால், இன, மத வேறுபாடுகளினால், கருத்தியல் (தாராளவாதம், சோசலிஸம் போன்ற) மோதல்களால், வர்த்தக மற்றும் பொருளாதார முரண்பாடுகள், சக்தி விநியோகத்தால், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தால், அன்றாட உணவுக்காக மற்றும் சுற்றுப்புறச்சூழலின் சீர்கேட்டால் வரும் அச்சுறுத்தலில் இருந்து மனிதனையும் தேசத்தினையும் பாதுகாக்கும் பொருட்டு, தொற்று நோய்களால், காலநிலை மாற்றம் மற்றும் அரசு சாரா செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகள் போன்றவற்றினால் சவால்களை எதிர் நோக்கி வருகின்றன.
சர்வதேச பாதுகாப்பின் அவசியம் பற்றி பார்த்தோமானால் இரு பெரும் உலகமகா யுத்தத்திற்குப் பின்னர் இன்னுமோர் பாரிய யுத்தம் ஒன்று வராமல் தடுத்து நிற்பது இவ் சர்வதேச பாதுகாப்பு எனும் உத்தியே ஆகும். இதனை 2ம் உலக மகா யுத்தத்திற்கு பின்னர் நடமுறையில் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பினை பேனி வரும் ஒரு உலகலாவிய நிறுவனமாக ஐக்கிய நாடுகள் சபை காணப்படுகின்றது. இந்நிறுவனம் சர்வதேச பாதுகாப்பு எனும் எண்ணக்கருவின் கீழ் மேற்கொள்ளும் பல்வேறுபட்ட நடவடிக்கைகளே இன்று சர்வதேச பாதுகாப்பினை உறுதி செய்து 3ம் உலக யுத்தம் ஒன்று ஏற்படாது தடுத்து ஓரளவிலேனும் அமைதியைப் பேணி வருகின்றது எனக் கூறலாம். இதில் ஓரளவு என்ற சொற்பிரயோகத்தின் மூலம் வெளிப்படுத்தப்படுவது என்னவென்பது நாம் அனைவரும் அறிந்த விடயமாகும். அதாவது 2ம் உலகமகா யுத்தத்தின் முடிவின் பின்னரும் சர்வதேச பாதுகாப்பினை அச்சுறுத்தக்ககூடிய பல்வேறு சம்பவங்கள் இடம் பெற்று வந்ததை நாம் அறிவோம்.
பனிப்போர், கியூப ஏவுகணை நெருக்கடி, கொரிய யுத்தம், வியட்நாம் போர், மும்பைத்தாக்குதல், இந்திய பகிஸ்தான் போர், அமெரிக்க இரட்டைக் கோபுரம் தீவிறவாதிகளால் தாக்குதலுக்குட்பட்டமை, ஈராக் குவைட் யுத்தம் போன்ற பல்வேறுபட்ட முரண்பாடுகளுக்கு உலகம் முகங்கொடுத்து வந்ததுடன் இவை 3வது உலக யுத்தத்திற்கான ஓர் எதிர்வுகூறல்களாக அமைந்த விடயங்களாகவும் காணப்பட்டன. இத்தகைய காரணங்களினால் இன்றைய உலகில் சர்வதேசப் பாதுகாப்பு மற்றும் சமாதானத்தை பேணி வரும் ஒன்றாக ஐக்கிய நாடுகள் சபையே மிக முன்னிலையில் காணப்படுகின்றது. அதனால் நாம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச்சபை சர்வதேச சமாதனத்தையும் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்துவதில் எத்தகைய வகிபங்கினை வகிக்கின்றது எனப்பார்ப்போம். தொடரும்..... (http://focusoffox.blogspot.com/2017/09/security-council-of-united-nations.html)
Posted by
Thiviya Mihirangani BA (Hons) Political Science
University of Peradeniya
No comments:
Post a Comment