ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை
ஐக்கிய நாடுகள் அல்லது ஐ.நா சபை ஆங்கிலத்தில் United nations எனப்படுவது உலகின் 193 நாடுகளை அங்கத்த்உவமாக கொண்ட ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். இது வாஷிங்டனில் நடைபெற்ற டம்பார்ட்டன் ஓக்ஸ் மகாநாட்டைத் தொடர்ந்து அக்டோபர் 24, 1945ல், கலிபோர்னியாவிலுள்ள, சான் பிரான்சிஸ்கோவில் தொடங்கப்பட்டது. இதன் தலைமையகம் நியூயோர்க்கில் உள்ளது. இதன் அங்கத்துவமானது திறந்து விடப்பட்டுள்ளது. சமாதானத்தினை விரும்பும் அணைத்து நாடுகளும் இதில் அங்கம் வகிக்கலாம். இதில் அங்கத்துவம் பெற விரும்பும் நாடுகளை பாதுகாப்பு சபையின் பர்ந்துரையின் கீழ் பொதுச்சபை அனுமதி பற்றிய தீர்மானத்தினை எடுக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களாக :
- கூட்டு நடவடிக்கைகளின் மூலம் ஆக்கிரமிப்புகளை ஒடுக்குதல்
- பன்னாட்டுச் சட்டங்களின்படி நாடுகளுக்கிடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து உலக அமைதியை ஏற்படுத்துதல்.
- மக்களின் சம உரிமைகளையும் சுயநிர்ணய உரிமைகளையும் மதித்தல்
- மனிதனின் உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் காத்து, இன மொழி அல்லது சமய வேறுபாடுகளை நீக்கிப் பன்னாடுகளின் சமுதாய பொருளாதார, பண்பாட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல்.
- உறுப்பினர்கள் அனைவருக்கும் சம உரிமை வழங்கள்
- உறுப்பு நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளை உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்படாத வகையில் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
- உறுப்பு நாடுகள் எக்காரணம் கொண்டும் பிற நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடக் கூடாது.
போன்றவை காணப்பட்டன. மேலும் இச்சபையானாது 6 கட்டமைப்புக்களை
கொண்டுள்ளது. அவையாவன :
- ஐக்கிய நாடுகள் பொதுச் சபை
- ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை
- ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை
- ஐக்கிய நாடுகள் பொறுப்பாட்சி மன்றம்
- ஐக்கிய நாடுகள் செயலகம்
- அனைத்துலக நீதிமன்றம்
போன்றவையாகும்.
இதில் உலக சமாதானம் மற்றும் பாதுகாப்பினை பேணும் பாரிய பொறுப்பு பாதுகாப்புச்சபைக்கு
உள்ளது. பாதுகாப்புச்சபை பற்றி ஐக்கிய நாடுகள் பட்டயத்தின் 5வது அத்தியாயத்தில் 23
வது உறுப்புரையில் குறிப்பிட்டுள்ளதன் படி பாதுகாப்புச்சபை ஐக்கிய நாடுகளின் பதினைந்து
அங்கத்தவர்களைக் கொண்டிருத்தல் வேண்டும். சீனக் குடியரசு, பிரான்ஸ், ரஷ்யா, பெரிய பிரித்தானியாவின்
ஐக்கிய இராச்சியம் வட அயர்லாந்து, ஐக்கிய அமெரிக்க நாடுகள் என்பன பாதுகாப்புச்சபையின்
நிரந்தர அங்கத்துவர்களாவர். சர்வதேச சமாதானத்தையும் பாதுகப்பினையும் பேணுதல் மீதும்
ஒழுங்கமைப்பின் வேறு நோக்கங்கள் மீதும், ஐக்கிய நாடுகளின் அங்கத்தவர்களின் பங்களிப்பு
பற்றி முதலில் விசேடமாகக் கவனஞ் செலுத்தி, உலகத்தில் பற்பல பிரதேசங்கள் பிரதிநிதித்துவப்படும்
விதத்தில், பாதுகாப்புச் சபையின் நிரந்தரமல்லாத அங்கத்தவர்களாக ஐக்கிய நாடுகளின் வேறு
பத்து நாடுகளை பொதுப் பேரவை தெரிவுசெய்தல் வேண்டும்.
ஐக்கிய நாடுகள் கொடி |
பாதுகாப்புச்சபையின் நிரந்தரமல்லாத அங்கத்தவர்கள் இரண்டு
வரட காலப்பகுதிக்குத் தெரிவு செய்யப்படுவர். பாதுகாப்புச்சபை அங்கத்தவர் தொகை 11 இல்
இருந்து 15 ஆக அதிகரிக்கப்பட்டதன் பின்னர் வரும் முதலாவது தெரிவில் அம்மேலதிக அங்கத்தவர்
நால்வரின் இருவர் ஒரு வருடகாலப் பகுதிக்குத் தெரிவு செய்யப்படுவர். இளைப்பாறும் அங்கத்தவர்
ஒருவர் உடனடியாக மீளத் தெரிவு செய்யப்படுவதற்குத் தகைமையுடையவராகார். பாதுகாப்புச்
சபையின் ஒவ்வோர் அங்கத்தவரும் ஒரு பிரதிநிதியைக் கொண்டிருத்தல் வேண்டும்.
மேலும் பாதுகாப்புச்சபையின் பணிகளும் தத்துவங்களும் உறுப்புரை
24 ல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதன் படி ஐக்கிய நாடுகளின் செயற்பாடுகள்
உரிய நேரத்தில் திறம்பட நிறைவேற்றப்படுவதனை உறுதிப்படுத்துவதற்காக அதன் அங்கத்துவ நாடுகள்
சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பினையும் பேணும் அடிப்படைப் பொறுப்பினை பாதுகாப்புச்
சபையிடம் ஒப்படைத்துள்ளனர். அவ்வாறே இப் பொறுப்பின் கீழ் தமது கடமைகளை நிறைவேற்றுகையில்
பாதுகாப்புச் சபை செயற்படுவது அவர்களுக்காகவென்பதை ஏற்றுக் கொள்வதற்கு அவ் அங்கத்துவ
நாடுகள் உடன்படுகின்றன.
இக்கடமைகளை நிறைவேற்றுகையில் பாதுகாப்புச் சபை ஐக்கிய நாடுகளின்
நோக்கங்களுக்கும் கொள்கைகளுக்கும் இணங்கச் செயற்பட வேண்டும். இக்கடமைகளை நிறைவேற்றுவதற்காக
பெற்றுள்ள குறிப்பிட்ட தத்துவங்கள் 6ஆம், 7ஆம், 8ஆம், 9ஆம் அத்தியாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பொதுப் பேரவையின் ஆலோசனைக்கு உட்படுத்துவதற்காக பாதுகாப்புச் சபையானது அதன் வருடாந்த
அறிக்கைகளையும் சமர்ப்பித்தல் வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சின்னம் |
உறுப்புரை 25 இன் படி இப்பட்டயத்திற்கு இணங்க பாதுகாப்புச்
சபையின் தீர்மானங்களை கொண்டு நடாத்துவதற்கு ஐக்கிய நாடுகளின் அங்கத்துவ நாடுகள் உடன்பட
வேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளது. மேலும் உறுப்புரை 26ல் உலகத்தின் மனித மற்றும் பொருளாதார
மூலவளங்களை முடிந்தளவில் யுத்த உபகரணங்கள் ஆக்கத்திற்காக குறைவாக ஈடுபடுத்தி சர்வதேச
சமாதானத்தையும் பாதுகாப்பினையும் தாபித்தலையும் பேணுதலையும் ஊக்குவிப்பதற்காக 47ஆம்
உறுப்புரையில் குறிப்பீடு செய்யப்பட்ட இராணுவப் பணியாட்டொகுதிக்கு குழுவின் உதவியுடன்
யுத்த உபகரணங்களை ஒழுங்குபடுத்தும் முறைமையொன்றைத் தாபிப்பதற்காக ஐக்கிய நாடுகளின்
அங்கத்தவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய திட்டங்கள் தயாரிப்பதும் பாதுகாப்புச் சபையின்
பொறுப்பாதல் வேண்டும். இத்தகைய பொறுப்புக்களைக் கொண்ட பாதுகாப்புச் சபை உலகின் சமாதனம்
மற்றும் பாதுகாப்பினைப்பேண எத்தகைய வகிபங்கினை வகித்துள்ளது என்பது தொடர்பாக இனி ஆராய்வோம்.
Posted by
Thiviya Mihirangani BA (Hons) Political Science
University of Peradeniya
No comments:
Post a Comment