type in English

Friday, October 6, 2017

Roman Citizenship


உரோமக் கால குடியுரிமை

உரோமானிய தத்துவவியலாளர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் குடியுரிமை பற்றிய நடைமுறை சாத்தியம் மிக்கதும் நடைமுறைக்கு பொருந்தக் கூடிய வடிவத்தினை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஈடுபட்டனர். சட்டத்தை அடிப்படையாக கொண்டு நிர்வாக ரீதியில் இயைபாக்க தன்மை கொண்டவர்களான உரோமானியர்கள் மிகவும் பல்தன்மை கொண்ட நெகிழ்ச்சியான சட்ட அந்தஸ்துடைய குடியுரிமை வகையினை அபிவிருத்தி செய்தனர். உரோமக்கால குடியுரிமையானது கிரேக்கக் கால குடியுரிமையில் இருந்து முற்றிலும் வேறுபட்டவொன்றாகும். இக் காலத்தில் அரசியல் மற்றும் சட்ட ரீதியான இரு சமுதாய அமைப்பு கானப்பட்டது. இதன் அடிப்படையில் சட்டப்பிரஜாவுரிமை, அரசியல் பிரஜாவுரிமை என் இருவகைப்பட்ட பிரஜாவுரிமைக் காணப்பட்டது. உரோம சாம்ராஜ்ய பிரஜைகள் வாக்களிப்பதற்கான உரிமையினையும் நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயங்களில் (Tribunals) அமர்ந்து பங்கெடுக்கும் உரிமைகளைக் கொண்டிருந்தனர். இக் குடியுரிமை செயலூக்கம்மிக்க சட்டத்தன்மையில் கவனமெடுத்ததுடன் இணைந்த வகையில் காணப்பட்டது.
உரோமானியக் குடியுரிமையானது ஆறு வரப்பிரசாதங்களை கொண்டு காணப்பட்டது. அவற்றுள் நான்கு பொது உரிமைகளும் இரண்டு தனியார் உரிமைகளும் காணப்பட்டன. அவையாவன:
பொது உரிமைகள்
·         இராணுவ சேவையில் இணைதல்.
·         மகா அமைப்பில் அதாவது சட்டமன்றில் வாக்களித்தல்.
·         அரசாங்கப்பதவிகளை வகிப்பதற்கான தகுதி.
·         சட்டத்தின் பாதுகாப்பை பெறுதல்.
தனியார் உரிமைகள்
·         பரஸ்பர திருமனம்
·         ஏனைய உரோம பிரஜைகளுடன் வர்த்தகத்தில் ஈடுபடுதல்.
          
ஆரம்பத்தில் உரோமைப் பிறப்பிடமாக கொண்டவர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்த இக் குடியுமையானது பிற்காலத்தில் குடியுரிமையின் பிரத்தியேகத்தன்மை அற்று பிறநாட்டவர்களுக்கும் வழங்கப்பட்டது. அதாவது உரோம் பேரரசாகத் தன்னை பிரகடனப்படுத்திக் கொள்ல முற்பட்ட காலத்தில் அரசுகளுக்கிடையில் போர்கள் ஏற்பட்டு வந்ததுடன் அரசுகள் தம்மை விஸ்தரித்துக் கொள்வதில் மிக்க ஆர்வம் காட்டின. அந்தவகையில் உரோம அரசர்களும் ஏனைய அரசுகளை கைப்பற்றி தமது அரசை விஸ்தரிப்பதில் கவனம் செலுத்தினர். முக்கியமாக அரிஸ்டோட்டலின் மாணவனான அலெக்சான்டர் பல நாடுகளுடன் போரில் ஈடுபட்டு வெற்றி கண்டு உரோமுடன் பல சிற்றரசுகளை இணைத்துக் கொண்டார்.


தொடர்ந்து போர் ஏற்பட்டு வந்ததன் காரணமாக உரோமப் பேரரசுபொருளாதாரம் நிதி தொடர்பானசவாலுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டது. மந்த நிலை ஏற்பட்டிருந்தது இதன் காரணமாக தமது வருமானத்தை அதிகரித்துக் கொள்ளும் நோக்குடன் கரகல்ல போன்ற ஆட்சியாளர்கள் பிற்காலத்தில் பிறநாட்டவர்களுக்கும் குடியுரிமை வழங்க முற்பட்டனர். இதன் மூலம் அம் மக்களிடம் இருந்து வரிகளை வசூலித்து வீழ்ச்சியுற்றிருந்த பொருளாதார வளத்தை உயர்த்திக் கொண்டனர். இவ்வாறு வெற்றி பெற்ற நிலப்பகுதிகளில் வாழும் மக்களும் உரோமானிய குடியுரிமை பெற்று வாழ்ந்து வந்தனர். அந்தவகையில் உரோமானிய குடியுரிமையானது கிரேக்கக் குடியுரிமையைப் போன்று மட்டுப்படுத்தப்பட்டவொன்றாக அல்லாமல் பெண்கள் உட்பட அனைவர்க்குமாகதிறந்து விடப்பட்டவொன்றாக காணப்பட்டது.இவ்வாறு உரோமைப் பிறப்பிடமாக கொள்ளாத பிறநாட்டவர்கள் உரோமப் பேரரசுக்குள் இணைந்த பின்னர் உரோமப் பேரரசின் குடியுரிமையினையும், உரோமக் குடியரசின் குடியுரிமையையும் இனைத்து இரட்டைக் குடியுரிமை என்னும் வகையில் அனுபவித்து வந்தனர்.இம் மக்கள் சட்டத்தின் பாதுகப்பை பெற்றவர்களாகவும் காணப்பட்டனர். அதாவது தமக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு சட்டத்தினால் அதற்கான நிவாரனங்களை பெற்றுக் கொள்ளும் தகுதியினைக் கொண்டிருந்தனர்.

       விமர்சனம்

உரோமக் கால குடியுரிமைக் கொள்கையானது ஜனநாயத்துவம் வாய்ந்தவொன்றாக காணப்பட்ட போதிலும் அடிமைகள் தவிர்ந்த அனைத்து உரோம பேரரசு வாழ் மக்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டமையானது அதன் பிரத்தியேகத் தன்மையினையும் பெறுமதியையும் குறைத்ததுடன் பிரஜைகள் மத்தியில் பொறுப்புணர்வு இன்மையினை ஏற்படுத்தியது.
போரின் போது அடிமைப்படுத்தி தன் ஆட்சியுடன் இணைத்துக்கொண்ட நாட்டினது மக்களுக்கும் உரோமனியக்குடியுரிமை வழங்கப்பட்டிருந்த போதிலும் அவர்களுக்கான அரசியல் உரிமை பரிக்கப்பட்டிருந்தது. அதாவது அவர்களுக்கு சட்டத்தினால் முழுமையான பாதுகாப்பும், வர்த்தக உரிமைகள் மற்றும் உரோமனிய ஆடவனையோ அல்லது பெண்னையோ திருமனம் செய்து கொள்வதற்கான உரிமை போன்றன வழங்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் உரோமின் மகா அமைப்பில் வாக்களிக்கும் தகுதியைப் பெறாதவர்களாகவும் உரோமின் இரண்டாம் தர பிரஜைகளாகவுமே கருதப்பட்டனர்.
இவ்வாறு அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்பட்டு உரோமானிய மக்களுடன் இனைந்து வாழ்வதற்கான உரிமையையும் அவர்களுடைய கலாசார விழாக்களில் கலந்து கொள்ளவும், பொது குளியலில் பங்கு பற்றவும் விளையாட்டுகளில் பங்கு பெறவும் உரிமைகளை கொண்டிருந்த போதிலும் பிறநாட்டவர்கள் என்ற ரீதியில் மக்களுடைய அரசியல் உரிமை பரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கவோர் விடயம் ஆகும். சாதாரனமாக குடியுரிமை என்பதை வரையறை செய்யும் போது அதனைப் பெற்றவர்களுக்குள்ள குறிப்பிடதக்க உரிமை அரசியல் விடயங்களில் பங்கு கொள்வதாகும். ஆனால் உரோமர் காலத்து பிறநாட்டவர்களுக்கு வழங்கப்பட்ட குடியுரிமையில் அது மறுக்கப்பட்டுள்ளமை விமர்சனதுக்குட்படுதப்பட வேண்டிய விடயமாகும்


Posted by
Thiviya Mihirangani BA (Hons) Political Science 

University of Peradeniya

No comments:

Post a Comment

NATO

நேட்டோவின் தோற்றம் மற்றும் வளர்ச்சி   நேட்டோ அரசு சார் பிராந்திய அமைப்பாகும் . 4 ஏப்ரல் 1949 ஆம் ஆண்டு இரு வட அமெரிக்க மற்றும...