சர்வதேச பாதுகாப்பிற்கான இராணுவ அச்சுறுத்தல்.
சர்வதேச பாதுகாப்பு என்பது ஆரம்ப காலத்தில் இருந்து அரசியல் அடிப்படையிலேயே நோக்கப்பட்டு வந்தது. இதனடிப்படையில் அரசுகளுக்கிடையிலான தொடர்பு மூலமும் அதிகார மற்றும் ஆதிக்கப்போட்டி மூலமும் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் அதாவதுஇ அரசுக்கு வெளியே இருந்து
அந்த அரசுக்கு எதிராக ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் என்றவகையினிலே சர்வதேச பாதுகாப்பு என்பது நோக்கப்பட்டது. குறிப்பாக இராணுவ நலன்களை மையப்படுத்தியதாகவே ஆரம்ப கால சர்வதேச பாதுகாப்பு என்பது நோக்கப்பட்டது. இதனை மரபு ரீதியான நோக்கு என்பர். அத்தோடு 1991அதாவது பனிப்போர் முடிவு மற்றும் ரஷ்யாவின் வீழ்ச்சி வரை சர்வதேச பாதுகாப்பு என்பது இராணுவம் மற்றும் அரசிற்கான வெளிவாரியான அச்சுறுத்தல்கள் என்பவற்றை சுற்றுச்சுழன்ற போதும் அதற்கு பிற்பட்ட காலத்தில் விரிவடைந்து மரபுசாரா நோக்கு என்ற அடிப்படையில் இனம்இ மதம், மொழி, தனிநபர், குற்றக்குழுக்கள், பயங்கரவாதம், சுகாதார மற்றும் சூழலியல் பிரச்சினை, வறுமை, சனத்தொகை பிரச்சினை, சைபர் தாக்கங்கள் என்பவற்றில் இருந்து ஏற்படக்கூடிய நெருக்கடிகளிலிருந்து விடுபடுதலை நோக்காக கொண்ட ஒன்றாக மாறியது. இதில் நாம் சர்வதேச பாதுகாப்பிற்கான இராணுவ அச்சுறுத்தல் தொடர்பாக விரிவாக பார்ப்போம்.
இராணுவம்: ஒரு நாட்டிற்காக வன்முறையைப் பயன்படுத்த அதிகாரம் அளிக்கப்பட்ட ஓர் அமைப்பு ஆகும். இவ் இராணுவப்படையானது தரைப்படைஇ கடற்படைஇ வான்படை மற்றும் ஈரூடகப்படை என வகைப்படும். இராணுவ அச்சுறுத்தல் அல்லது இராணுவ சவால் எனப்படுவது பொருளாதார மற்றும் இராஜதந்திர மோதல்களை தீர்ப்பதற்காக இராணுவ படையினை பயன்படுத்தி எதிர்கொள்ளும் ஓர் இராணுவ புலனாய்வூ நுட்பமுறையாகும். அந்தவகையில் இதன் மூலம் குறிப்பிட்ட நாட்டின் இராணுவ வலிமையானது இன்னுமொரு நாட்டிற்கோஇ நாடுகளுக்கோஇ குறிப்பிட்ட பிராந்தியத்திற்கோ அல்லது உலகிற்கே நெருக்கடியாக அமையும். 20ஆம் நூற்றாண்டு வரை இராணுவ ரீதியான அச்சுறுத்தல்களுக்கே சர்வதேச நாடுகள் முகங்கொடுத்து வந்தன. அதே போல் நாடுகள் தமது பாதுகாப்பினை இராணுவ பலத்தின் ஊடாகவே உறுதி செய்தும் வந்தன. இதுவோர் சுழற்சி
முறையில் இடம்பெறும் ஒன்றாகும். ஒரு நாடு தனது இராணுவத்தினை பெருப்பித்துக் கொள்ளும்போது இன்னுமொரு நாட்டிற்கு அது அச்சுறுத்தலாக அமைந்து அந்நாடு தனது இராணுவ பலத்தினை விரிவாக்கிக் கொள்ளஇ மீண்டும் முதல் நாடு தனது இராணுவத்தினை மேலும் விரிவாக்கிக்கொள்ளும் இதுவே இச்சுழற்சி முறையாகும்.
Bery
Buzan என்பவர் “PEOPLE, STATE AND FEAR” என்ற தனது நூலில் மிக முக்கியமாக இராணுவம் தொடர்பான பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். இவர் இராணுவப்பாதுகாப்பு என்பது அரசுகளுக்கிடையிலான போட்டா போட்டி மற்றும் அச்சுறுத்தல்களை எதிர் கொள்வதற்கான ஆற்றலே எனக்குறிப்பிட்டார். அந்த வகையில் ஒரு நாட்டிற்கு வரக்கூடிய மிகமுக்கிய அச்சுறுத்தல் இராணுவத்தினூடாகவே ஆகும் என எடுத்துக்காட்டுகிறார்.
Hens
Moganthough “POLITICS AMONG NATIONS” என்ற தனது நூலில் அரசுகள் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பொருட்டு அதிகார வழிமுறைகளையே நாடுகின்றன எனவூம் தமது அதிகாரத்தினை நிர்ணயிக்கும் காரணிகளுள் ஒன்றாக இராணுவத்தினையூம் கொண்டு இராணுவ வலிமையினை பெருக்கி வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
George
Sorenson, அரசுகளை நவீன, பின்நவீன மற்றும் காலனித்துவத்தின் பின்னரான அரசுகள் என வகைப்படுத்திஇ இதில் நவீன அரசுகள் முகங்கொடுத்த அச்சுறுத்தலாக: ஒரு நாடு இராணுவ பலத்தின் ஊடாக தனது அதிகாரத்தை விஸ்தரித்துக்கொள்ளல் மற்றைய அரசுகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்தது எனக்குறிப்பிட்டார்.
இவ் இராணுவ அச்சுறுத்தலானது MAD(Mutually
Assured Destruction) எனும் கோட்பாட்டின் அடிப்படையினையே கொண்டுள்ளது. அதாவது பரஸ்பர உறுதிபடுத்தப்பட்ட அழிவூ ஆகும்.
இராணுவங்களைக் கொண்டு உலகையே அச்சுறுத்திய இரு உலகப் போர்களாக முதலாம் (1914 - 1918)இ இரண்டாம் (1939 - 1945) உலகமகா யூத்தங்கள் காணப்படுகின்றன. இக்காலங்களில் யூத்தமும் இராணுவ வலிமையூமே மிக முக்கிய காரணிகளாக காணப்பட்டன. இவ் இரு யூத்தங்களின் முடிவில் அமெரிக்கா தலைமையில் முதலாளித்துவ பொருளாதார நாடுகள் இணைந்து நேட்டோ அமைப்பினையூம் சோவியத் ஒன்றியம் தனது கம்யூனிச நாடுகளுடன் கூட்டினைந்து வோர்சோ அமைப்பை உருவாக்கி இரு இராணுவ முகாம்களாக செயற்பட்டன. இவ்விரு நாடுகளும் நேரடியாக மோதிக்கொள்ளாமல் தமது இராணுவ வலிமையை பலப்படுத்துவதன் ஊடாகவூம், தொழில்நுட்பம்,விளையாட்டுப் போட்டிகள், விண்வெளி பந்தயங்கள் மூலமுமே தமது எதிர்ப்புக்களையூம் அச்சுறுத்தல்களையூம் காட்டி வந்தனர். இதனை பனிப்போர் அல்லது நிராயூத யூத்தம் எனும் பெயர் கொண்டு அழைப்பர். இது 1950 தொடக்கம் 1991 சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி வரை நீடித்திருந்தது.
பனிப்போர் காலத்தில் கொரியப் போர்இ வியட்நாம் யூத்தம்இ பேர்லின் பிரச்சினைஇ கியூப ஏவூகணைப்பிரச்சினை போன்ற பல இராணுவ அச்சுறுத்தல்கள் சர்வதேச பாதுகாப்பிற்கு பாரிய சவால்களாக அமைந்தவையாகும். இத்தகைய இராணுவ அச்சுறுத்தல்களின் பின்னர் பனிப்போரின்முடிவில் இராணுவ அச்சுறுத்தலுக்கு மேலாக 2001இல் இடம்பெற்ற அமெரிக்கத் தாக்குதலோடு (9/11) சர்வதேச பாதுகாப்பு என்பது தனித்து இரானுவ அச்சுறுத்தல் என்பதில் இருந்து விரிவூபட்டு பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல்களில் இருந்து தம்மை பாதுகாப்பதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. இதன் பின் மரபு சாரா சர்வதேச பாதுகாப்பு நோக்கு முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. எனினும் இராணுவத்தின் முக்கியத்துவமும் அதிலிருந்து விடுக்கப்படும் அச்சுறுத்தலும் இன்றுவரை தனது செல்வாக்கினை நிலைநாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு பல வழிமுறைகள் இருந்த போதிலும் எந்தவொரு நாடும் இராணுவ பலத்தினை விட்டுக்கொடுக்க முன்வருவதில்லை.
அந்தவகையில் அண்மைக்காலங்களாக இராணுவ பலத்தினால் அச்சுறுத்தல் விடுக்கப்படும் சம்பவங்களாக பகிஸ்தான் இந்தியாவிற்கு இடையிலான போர் காரணமாக இடம்பெறும் காஷ்மீர் மீதான இராணுவ அச்சுறுத்தல், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்த சிரியா மீதான இராணுவ அச்சுறுத்தல், அமெரிக்காவூம், தென் கொரியாவூம் மேற்கொள்ளும் கூட்டு இராணுவப் பயிற்சி வடகொரியாவிற்கு அச்சுறுத்தலாக அமைதல் போன்றன காணப்படுகின்றன. இதில் வடகொரிய அதிபர்அண்மையில் தனது கருத்தினை வெளியிட்ட போது “எங்களின் சொந்த இராணுவத்தின் வலிமை தான் எங்களை ஏகாதிபத்திய தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும்." “எப்போதும் தீவிர மடைந்து வரும் அமெரிக்காவின் வலிந்த தாக்குதலுக்கு ஈடுகொடுக்க எங்களின் இராணுவத்தை பல வழிகளில் தொடர்ந்து தயார்படுத்துவோம்" என குறிப்பிட்டிருந்தார்.
இத்தகைய சம்பவங்களானது இன்று என்னதான் புதிய பல தொழில்நுட்ப முறைகள் மற்றும் பொருளாதார ரீதியில் நாடுகள் வலிமை பெற்று வந்திருந்த போதிலும் தமது இராணுவத்தை பலப்படுத்துவதையே தம் நாட்டின் வலிமையாக எண்ணிவருகின்றன. எனவே இராணுவ அச்சுறுத்தல் என்பது தனித்து மரபு சார் ஒன்று எனக்கூறி புரக்கணிக்க இயலாது. ஏனெனில் இன்றும் இராணுவ அச்சுறுத்தல் என்பது சர்வதேச பாதுகாப்பை சவாலுக்கு உட்படுத்தும் ஒன்றாக உள்ளது.
Posted by
Thiviya Mihirangani BA (Hons) Political Science
University of Peradeniya
No comments:
Post a Comment