மேற்குலகு / மேற்கத்தேயம்
மேற்கத்தேயம் என்பது யாதெனில் ஐரோப்பாவின்
மேற்கு அரைப்பகுதியில் உள்ள நாடுகளுடன் பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, பிரேசில்,
மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளை குறித்து நிற்கின்றது. அந்தவகையில் மேற்கு
ஐரோப்பிய நாடுகள் எனப்படும் போது பிரித்தானியா, அயர்லாந்து, பிரான்சு, மேற்கு ஜெர்மனி,
எசுப்பானியா, இத்தாலி, போர்ச்சுக்கல், பின்லாந்து, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, சுவீடன்,
நோர்வே, லீக்டன்ஸ்டைன், மொனாக்கோ, ஐஸ்லாந்து, டென்மார்க், கிரேக்கம், நெதர்லாந்து,
பெல்ஜியம் போன்றவை அடங்கும். மேற்கு ஐரோப்பிய நாடுகள் எனப்படும் போது பனிப்போர்க் காலத்தில்,
இத்தொடர், பொதுவுடமை சாராத நாடுகளை மட்டுமே குறிக்கவே பயன்பட்டது. இதனால், புவியியல்
அடிப்படையில் நடுப்பகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் உள்ள நாடுகளில் சோவியத் ஒன்றியத்தின்
செல்வாக்கிற்கு உட்படாத நாடுகளும் மேற்குநாடுகளுள் உள்ளடக்கப்பட்டன. அதேவேளை மேற்கு
ஐரோப்பாவுள் அடங்கிய சோவியத்தின் நட்புநாடுகள் இதற்குள் அடக்கப்படவில்லை. இரண்டாம்
உலகப்போர் முடிந்ததில் இருந்து, இத்தொடர், உயர் வருமானம் கொண்ட ஐரோப்பாவின் வளர்ந்த
நாடுகளைக் குறிக்கவே பயன்படுகிறது.
ஆரம்பகாலங்களில் இருந்தே உலகம் மேற்குலகத்தின்
அடிப்படையிலேயே சுழல்கிறது. அதாவது அனைத்து விஞ்ஞானங்களினதும் தந்தையாக விளங்கும்
கிரேக்க காலம் முதல் மேற்குலகு தனது பெருமையை தக்கவைத்து வந்துள்ளது. அரசியல் என்ற
அடிப்படையிலும் கிரேக்கமே முதலில் ஆய்வில் ஈடுபட்டு வந்துள்ளது. சோபிஸ்ட வாதிகள்,
சோக்கிரட்டீஸ், அரிஸ்டோட்டல், பிளேட்டோ என இதன் பட்டியல் நீண்டு செல்கிறது.
இக்காரணத்தினாலோ என்னவோ உலகமும் மேற்குலக அரசியலை ஏற்று அதனை பிந்தொடர்ந்து அதனையே
கல்வியாகவும் கற்று வருகின்றது.
முதன் முதலில் அரசு என்பது அடையாளங்காணப்பட்ட
இடமாக நதிக்கரையோர அரசுகள் விளக்குகின்றன. இந் நதியோர அரசுகளை அடிப்படையாகக்
கொண்டே உலகின் தலைசிறந்த நாகரீகங்களாகக் கருதப்படுகின்ற சிந்துவெளி நாகரீகம்,
நைல்நதி நாகரீகம் என்பனவும் தோற்றம் பெற்றன. இந் நாகரீகங்களும் அரசுகளும் கிழக்கு
தேசங்களிலேயே அதிகளவிலேயே தோற்றம் பெற்றன. ஆனால் அதிகளவிலான அதிகார பிரயோகங்கள்
காரணமாக இவ்வரசுகள் ஒரு குறிப்பிட்ட காலமே நிலைபெற்றதோடு புகழ்பெற்ற
நாகரீகங்களையும் உருவாக்கியமையால் அரசுகளின் வரலாற்றில் முக்கியம் பெற்றவையாக
விளங்குகிறன. பின்னர் கிரேக நகர அரசுகள் தோன்றின. இதனை தொடர்ந்து உரோம பேரரசு,
மானிய முறை அரசு, தேசிய அரசு மற்றும் புதிய அரசுகள் என விரிவடைந்து வந்தன.
கிரேக்கம், உரோமம், மானியமுறை போன்ற அரசுகளைத்
தொடர்ந்து மானியமுறை அரசின் வீழ்ச்சியோடு புதிய அரசுகள் போன்றன மேற்கத்தேய உலகில் தோற்றம்
பெறலாயின. இதன் போதே தேசிய அரசுமுறையும் உருவாகின. ஒரு இனத்திற்கு ஒரு அரசு என்ற
எண்ணக்கரு மூலம் தேசிய அரசுகள் உருவாகின. பிரித்தானியா, பிரான்சு போன்ற மேற்கத்தைய
நாடுகளிலேயே இதன் தோற்றம் முதலாவதாக உரவாகின. அதனை தொடர்ந்து ஜேர்மன்,
இத்தானியிலும் தோன்றின. 20ஆம் நூற்றாண்டில் உலகம் பூராகவும் தேசிய அரசுகள்
தோன்றின.
தேசிய அரசுகள் எனப்படும் போது ஒரு குறிப்பிட்ட
பிரதேசத்தினை சேர்ந்த மக்கள் தமக்கேயுரிய கலாச்சாரம், மொழி, சமய தனித்துவத்தினை
அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். அந்தவகையில் மேற்கத்தேய
முறைப்படி ஒரு தேசிய அரசின் கீழ் குறிப்பிட்ட ஒரு தேசிய இனமே பிரதானமாக காணப்படும்.
தேசிய அரசுகளின் தோற்றத்திற்கு மேற்கத்தேய
நாடுகளில் இடம் பெற்ற புதிய மாற்றங்களே காரணமாய் அமைந்தன. அந்தவகையில் கிறிஸ்தவ மத
சீர்திருத்தம், விஞ்ஞான மறுமலர்ச்சி, மானிய முறை வீழ்ச்சி, கைத்தொழில் புரட்சி,
முதலாளித்துவத்தின் எழுச்சி போன்றனவும் தேசிய ஒருமைப்பாடு, இராணுவ கடற்படைப்பலம்,
வளர்ச்சியடைந்த பொருளாதாரம், நாடுகளின் வல்லாதிக்க திறன் போன்றன காரணமாய் அமைந்தன.
தேசிய அரசுகளின் தோற்றத்தோடு அமெரிக்கா,
பிரித்தானியா போன்ற நாடுகளும் தமது அரசுகள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு
அரசுகளின் தோற்றப்பாடுகளில் மாற்றங்களை செய்து வந்தன. அந்தவகையில் ஆரம்பத்தில்
தலையிடா அரசுகளாக இருந்து பொதுநல அரசுகளாகிய மாற்றம் அடைந்தவற்றினை மீண்டும் புதிய
தாராண்மைவாத அரசுகளா மாற்றி அமைத்தன. புதிய தாராண்மைவாத அரசு தனது பணிகளை
குறைத்துக் கொள்வதுடன் அவற்றினை அரசு சார்பற்ற நிறுவனங்களிடம் ஒப்படைத்தன. இது
குறைந்தபட்ச அரசுகளாக இனங்காணப்பட்டன.
இவை அனைத்தினையும் தொடர்ந்தே புதிய அரசுகள்
தோற்றம் பெற்றன. புதிய அரசுகள் என்பதனூடாக விளங்கிக்கொள்வது யாதெனில் பல
நூற்றாண்டு காலமாக குடியேற்ற நாடுகளாக மேற்கத்தேயத்தின் காலனித்துவ
ஆட்சிக்குட்பட்ட நாடுகள் விடுதலையடைந்து புதிய அரசுகளாக தோற்றம் பெற்றன. இதனால்
இவை புதிய அரசுகள் என அழைக்கப்படுகின்றன.
இப்புதிய அராசுகளில் ஏகாதிபத்திய அரசுகளிடம் இருந்து விடுபட்டு தோற்றம்
பெற்றவைகளுடன் கம்யூனிச ஆட்சி முறையில் இருந்தும் பல தேசங்கள் புதிய அரசுகளாக
தொற்றம் பெற்றுள்ளன. மேலும் முதலாம் மண்டல நாடுகளாக அபிவிருத்தி அடைந்த கைத்தொழில்
நாடுகளையும் இரண்டாம் மண்டல நாடுகளாக ரஷ்ய புரட்சியினை தொடர்ந்து சோவியத்
தலைமையிலான சோசலிஸ நாடுகளையும் மூன்றாம் உலக நாடுகள் என அபிவிருத்தி அடைந்து வரும்
நாடுகளை குறிப்பிடுவர்.
இன்று உலகம் மேற்கத்தேய மற்றும் கீழைத்தேய
நாடுகள் எனும் இரு வகைக்குள் பார்க்கப்படுகின்றன. அந்தவகையில் மேற்கத்தேய நாடுகள்
என அபிவிருத்தி அடைந்த நாடுகளையும் கீழைத்தேய நாடுகளாக அபிவிருத்தி அடைந்துவரும்
ஆசிய, ஆபிரிக்க மற்றும் இலத்தின் அமெரிக்க நாடுகளையும் அடையாளப்படுத்தப்படுகின்றன.
மேற்குறிப்பிட்ட விடயங்களை வைத்து நாம்
மேற்கத்தேயத்தின் பெருமை தொடர்பாக அறிந்துகொள்ள முடிகிறது. ஏனெனில் ஆரம்ப அரசுகள்
நதிக்கரையோர அரசுகளாக இருந்த போதிலும் முதன் முதலில் அரசின் தோற்றம் வளர்ச்சி
பற்றிய எண்ணக்கருக்கள் தோன்றி வளர்ந்து வந்த பகுதியாக மேற்கத்தேயமே
அடையாளப்படுத்தப்படுகின்றது. அந்தவகையில் நாம் அரசியலில் கற்கும் அரசு, அரசாங்கம்,
அதிகாரம், இறைமை, ஜனநாயகம், குடியாட்சி, அரசியலமைக்குட்பட்ட ஆட்சி, பாராளுமன்றம்,
ஜனாதிபதி, சமஷ்டி, ஒற்றை, மனித உரிமைகள், சட்டம், நீதி, நிர்வாகம், சுதந்திரம்,
சமத்துவம், வலுவேறாக்கம், சட்டத்தின் ஆட்சி, அரசியல் கட்சிகள், சிவில் சமூகம்,
புரட்சி போன்ற பல்வேறு விடயங்கள்
மேற்கத்தேயத்தில் இருந்து பரவலடைந்தவையாகும்.
அத்தோடு நாம் அரசியல் விடயங்களை அணுகுவதற்கான பல்வேறு விதமான
அணுகுமுறைகளும் பல்வேறுபட்ட கோட்பாடுகளும் மேற்கத்தைய நாடுகளால்
அறிமுகப்படுத்தப்பட்டவையாகும். இவை மரபு மற்றும் நவீனம், பின் நவீனம் என்ற
அடிப்படையில் புதுப்பொழிவுகளைப் பெற்று மாற்றம் அடைந்து வந்தன.
அக்கால அறிஞர்கள் இத்தகைய அணுகுமுறைகளை கொண்டே
நாடுகளினது அரசியல் முறைமைகள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தனர். மேலும் இவ்
அணுகுமுறைகள் மேற்கத்தேய பண்புகளை உள்ளடக்கியதாகவும் காணப்பட்டன. இவ்வாறு
மேற்குலகம் நமக்கு வழங்கிய கொடையாகவே அரசியலை நாம் கற்றுவருகிறோம். இன்று கூட
மேற்கத்தேயம் எதை கற்பிக்க வேண்டும் என குறிபிடுகின்றதோ அதையே நாம் கல்வியாக கற்று
வருகிறோம். உதாரணமாக மேற்குலகம் ஆசியா தொடர்பாக அறிவதற்காக ஆசியா தொடபான கற்கை
நெறியை பின்பற்றி வருவதோடு அதையே நாம் பல்கலைகழகத்தில் எமக்கான பாடநெறியாக கற்று
வருகிறோம். ஆசியாவை பற்றிய கற்கை நெறி எமது பல்கலைகழகங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட
காரணம் நாம் ஆசியாவில் வாழ்வதாலோ அல்லது ஆசியா தொடர்பான அறிவை எமக்கு
ஊட்டுவதற்காகவோ அல்ல அதற்கு காரணம் மேற்குலகம் ஆசியா தொடர்பான கற்கை நெறிக்கு
ஊக்கமளிப்பதனாலே என்பது எனது கருத்து.
Posted by
Thiviya Mihirangani BA (Hons) Political Science
University of Peradeniya
No comments:
Post a Comment