அகதிகள் என்போர் அரசியல், பொருளாதார, மத, பண்பாட்டு காரணிகள் மற்றும் போர், இயற்கை அனர்த்தங்களில் இருந்து உயிர் தப்பித்துக் கொள்ளும் பொருட்டு தமது சொந்த நாட்டை விட்டு இன்னொரு நாட்டிற்கு தப்பிச் செல்பவர்களாவர். இவர்களை சட்ட விரோத குடியேறிகள் எனவூம் குறிப்பிடுவர். அகதிகள் பிரச்சினை என்பது உலகம் பூராகவும் பரந்து உள்ளது. உதாரணமாக மத்திய, தென் அமெரிக்கா நாடுகளில் இருந்து ஐக்கிய அமெரிக்காவிற்கும்இ மத்திய தரைகடல், ஆபிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளிற்கும் இந்தியாவில் இருந்து மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளிற்கும் தெற்காசிய நாடுகளில் இருந்து அவூஸ்திரேலியா அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிற்கும் இவ்வாறு அகதிகள் இடம்பெயர்ந்து செல்கின்றனர். இன்று உலகின் அதிகமான அகதிகள் பிரச்சினை உள்ள நாடுகளாக ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, மியன்மார், சோமாலியா, தென் சூடான், பாலஸ்தீன், போன்ற நாடுகள் இணங்காணப்பட்டுள்ன.
மேற்குறிப்பிட்ட நாடுகளில் இரு நாடுகள் அதாவது ஆப்கானிஸ்தான் மற்றும் மியன்மார் போன்ற நாடுகள் ஆசிய நாடுகளாக உள்ளன. இவ்வாறிருக்க நாம் வாழும் தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள அகதிகள் பிரச்சினை தொடர்பாக அறிவது அவசியமாகும். 1999 ஆம் ஆண்டு ஆகும் போது தெற்காசியா உலகிலேயே 14% மான அகதிகளைக் கொண்டுள்ளதாக கணிப்பிடப்பட்டது. எனவே தெற்காசியாவில் அகதிகள் பிரச்சினை ஏற்படுவதற்கான காரணத்தினை அறிவோமாயின் இங்கு காலனித்துவ எதிர்ப்பு போர்கள் தன்னார்வ குழுக்களின் இயக்கம், புரட்சிகள், ஆட்சி மாற்றங்கள், ஆட்சி கவிழ்ப்புகள், இன, மத ரீதியான மோதல்கள, மாநில எல்லை வரையறுப்புகள், பொருளாதார மற்றும் சூழல் போன்ற பல்வேறு காரணிகளால் ஏற்படுகின்றது.
தெற்காசியாவிற்குள் அகதிகள் பிரச்சினை என நோக்குவோமாயில் 1971 ல் பங்களாதேஷ் சுதந்திர இயக்கத்தின் போது 10 மில்லி மக்கள் இந்தியாவின் மேற்கு வங்காளம், பீகார், அசாம், மேகாலயா, திரிபுரா போன்ற இடங்களுக்கு ஓடிவிட்டனர், 1979ல் ஆப்கானிஸ்தானை சோவியத் ஒன்றியம் ஆக்கிரமித்த போது பல ஆப்கான் மக்கள் பாகிஸ்தான் மற்றும் ஈரானிற்கு தப்பிச் சென்றனர், அதே போல் 1992 – 1996 வரை இடம்பெற்ற ஆப்கான் சிவில் யூத்தம் மற்றும் 2001 – 2014 வரை ஆப்கான் போர் என்பன ஆப்கானிஸ்தானில் இருந்து மக்கள் அகதிகளாக வெளியேர வழிவகுத்தது. 1983ல் இலங்கையில் சிங்கள பௌத்த இனவாதம் காரணமாக நடந்த யூத்தத்தில் 220,000 தமிழ் மக்கள் இந்தியாவிற்கு தப்பிச்சென்றதுடன், 1987ல் கொண்டுவரப்பட்ட பிரஜாஉரிமை சட்டம் காரணமாக இலங்கையில்
மலையக பிரதேசத்தில் வாழ்ந்துவந்த பல இந்திய தமிழ் மக்கள் இந்தியாவிற்கு சென்றமை, 1985இல் பூட்டானில் கொண்டுவரப்பட்ட குடியூரிமைச்சட்டம் காரணமாக பூட்டானில் தென் பகுதியில் வாழ்ந்த பல இந்து மக்கள் நேபாளம் மற்றும் இந்தியாவிற்கு நாடற்றவர்களாக இடம்பெயர்ந்தனர், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து ஹிந்துக்கள், சீக்கியர்கள், ஜெயினர்கள், புத்தமதத்தினர், கிறிஸ்தவர்கள், பார்சிகள் போன்றௌர் இந்தியாவிற்குள் அகதிகளாக உட்செல்லல், மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்லீம்களுக்கு எதிரான பௌத்த புரட்சியாளர்களின் செயற்பாடு காரணமாக அவர்கள் பங்களாதேஷ் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் அகதிகளாகக் குடியேறல் போன்று அகதிகளின் பிரச்சினை தெற்காசிவாவிற்குள் உள்ளன.
இவற்றை விட தெற்காசிய நாடுகளில் இருந்து பிற நாடுகளுக்கு அகதிகளாக தெற்காசிய மக்கள் செல்வதால் அந்நாடுகளும் அகதிகள் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றன. உதாரணாமாக் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வேலை வாய்ப்புக்களை வேண்டி ஐரோப்பிய நாடுகளிற்கு அகதிகளாக செல்லல் மற்றும் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் செல்லல்இ பங்களாதேஷில் இருந்து இந்தோனேஷியா, மலேஷியா தாய்லாந்து போன்ற நாடுகளிற்கும் இந்தியா இலங்கையில் இருந்து அவூஸ்திரேலியாவிற்கு சட்ட விரோதமாக கப்பலில் செல்லல் மற்றும் வேலைவாய்புகளை வேண்டி வளைகுடா நாடுகளிற்கு அகதிகளாக சென்று குடியேறல் போன்றன தெற்காசியாவிலிருந்து ஏனைய பிராந்திய நாடுகளில் சென்று குடியேறும் அகதிகளாக உள்ளனர்.
அகதிகளை நாடுகள் ஏன் ஒரு பிரச்சினையாக நோக்ககுகின்றன எனப்பார்த்தோமெனில்
பிற நாடுகளில் இருந்து வந்து சேரும் அகதிகளால் இந்நாடுகள் இடப்பற்றாக்குறை வளப்பற்றாக்குறை, உள் நாட்டுக்குள் சட்டத்திற்கு எதிரான செயற்பாடுகள் களவூஇ கொல்லை அதிகரித்தல் போதைப் பொருள் பாவனை விபச்சாரம் சுகாதார பிரச்சினைகள் பயங்கரவாத செயற்பாடுகள் போன்ற பல சிக்கல்களுக்கு முகங்கொடுக்க வேண்டி நேர்கின்றது. இதனாலே அகதிகள் எனப்படும் குழு ஏனைய நாடுகளில் ஒரு பிரச்சினையாக நோக்கப்படுகின்றனர். இதற்கு சிறந்த உதாரணம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகியமை ஆகும். இந்நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து இருக்கும் வரை அதன் அங்கத்துவ நாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்கு தஞ்ஞம் கொடுக்க வேண்டி ஏற்பட்டமையினால் தனது உள்நாட்டிற்குள் பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வந்தது. உதாரணமாக உள் நாட்டவர்களுக்கான வேலைவாய்ப்பின்மைஇ குற்றச்செயல்கள் அதிகரித்தல்இ கலாசாரத்தில் கேடுகள்இ மொழியின் தனித்துவம் இழக்கப்படுதல்இ உள் நாட்டுச்சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டி நேரிட்டமை போன்ற பல சிக்கல்களை எதிர்கொண்டமையினால் பிரித்தானியா
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியது.
மேலும் அகதிகளாக தஞ்ஞம் புகும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரே முகாமில் ஒன்றாக வசித்து வருவதால் பல சுகாதார பிரச்சினைகளுக்கும் அந்நாடு முகங்கொடுக்க வேண்டியூள்ளது. கடந்த மாதம் மியன்மாரில் இருந்து பங்களாதேஷிற்கு தப்பி வந்த மக்கள் வாழ்த முகாமில் வயிற்றோட்டம் காரணமாக பலர் அல்லல்பட்டு வந்தமைக் குறிப்பிடத்தக்கது. அதேபோல் இவ்வாறு அகதிகளாக வரும் மக்கள் குறிப்பிட்ட நாட்டில் இயங்கிவரும் பயங்கரவாத குழுக்களுடன் இணைந்து விடுமோ என்ற பயம் மற்றும் அகதிகளாக வரும் மக்களில் தீவிறவாதிகளும் தமது நாட்டிற்குள் புகுந்து விடுமோ என்ற பயம் பாகிஸ்தானிற்கு செல்லும் ஆப்கானிஸ்தானிய அகதிகள் தலிபான் தீவிறவாத குழுவைச்சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படல்.
அதேபோல் பாகிஸ்தானில் இருந்து வரும் முஸ்லீம் மக்களை தீவிறவாதிகள் என துறத்துதல் போன்ற காரணிகளால் நாடுகள் அகதிகளை ஒரு பிரச்சினையாக பார்க்கின்றன. இவ்வாறு இருக்க அகதிகள் பிரச்சினை தொடர்பாக யார் கண்காணித்து வருகின்றனர் எனப்பார்த்தோமெனில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையம், சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் பிரகடனம் மற்றும் பிராந்திய அமைப்புக்கள்
(தெற்காசியவில் சார்க்) என்பன இது தொடர்பாக அக்கறை செலுத்தி வருகின்றன. இதில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையம் தொடர்பாக விரிவாக பார்ப்போம்.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் அல்லது ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானியம் (United
Nations High Commissioner for Refugees) என்னும் ஐக்கிய நாடுகள் அமைப்பானது அகதிகளைப் பாதுகாப்பதற்கும்இ ஆதரவளிப்பதற்கும்இ அரசின் அழைப்பினாலோ அல்லது ஐக்கிய நாடுகளின் அழைப்பினால் அகதிகளை மீளத் திரும்புவதற்கோ அல்லது மீள் குடியமர்விற்கோ உதவூவதைக் கருப்பொருளாகக் கொண்டதாகும். 14 டிசம்பர் 1950 இல் ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்பின் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் அமைந்துள்ளது. இவ் அமைப்பானது அகதிகள் தொடர்பாக 1951ல் கொண்டு வரப்பட்ட ஐ.நா. அகதிகள் தீர்மானம் மற்றும் அதனைத் தொடர்ந்து 1967ல் கொண்டுவரப்பட்ட அகதிகள் தொடர்பான நடைமுறை ஒப்பந்தம் போன்றவர்றின் ஊடாக அகதிகள் தொடர்பான நடவடிக்கைகளை எடுத்துவருவதுடன் மேலும் அகதிகளை அதிகமாக கொண்ட நாடுகளில் தனது உதவி கரங்களை நீட்டி வருகின்றது. உதாரணமாக அகதிகளுக்கு ஆலோசணைகளை வழங்குதல், முகாம்களை அமைத்து கொடுத்தல், சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், உணவூ மற்றும் பாதுகாப்பு, கல்வி மற்றும் வாழ்வாதார பணிகளை மேற்கொள்ளல், அடையாள அட்டைகளை பெற்றுக் கொடுத்தல் போன்ற பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.
இவ்வாறு அகதிகள் தொடர்பான பிரச்சினைக்கு பல்வேறு அமைப்புகள் தனது உதவிகளை வழங்கிவரும் காரணத்தினால் அகதிகளை ஒரு பிரச்சினையாக நோக்குவதில் இருந்து நாடுகள் தெற்காசிய நாடுகள் விடுபட்டு வருவதும் உண்மையே. ஆனால் நாடுகளிற்குள் முரண்பாடுகள் தோன்றாவண்ணம் இவ் அகதிகள் பிரச்சினை தீர்க்கப்படுதல் என்பது அவசியமே அன்றேல் தெற்காசியாவின் பாதுகாப்பிற்கு மிகப்பாரிய அச்சுறுத்தலாக இவ் அகதிகள் பிரச்சினை எழும்பிவிடக்கூடும்.
Posted by
Thiviya Mihirangani BA (Hons) Political Science
University of Peradeniya
References :
No comments:
Post a Comment