யூத இனத்தவர்களின் புராதன உலகில் குடியுரிமை
குடியுரிமையின் ஆரம்பம் பற்றி பேச வருகையில் கட்டாயமாக ஈஸ்ரேலிய இனத்தவரான யூதமக்களின் அக்கால குடியுரிமை பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும்.இவர்கள் தம்மை எகிப்தியர்களில் இருந்தும் பாபுலோனியர்களில் இருந்தும் தம்மை வேற்றவர்களாகவும் தனித்துவம் மிக்கவர்களாகவும் கருதிக்கொண்டனர். இவர்கள் தமக்கென தனித்துவம் மிக்க எழுதப்பட்ட வரலாற்றினையும், பொது மொழியையும், ஒரு தெய்வத்தையும், சமயத்தையும் மற்றும் ஒரு நெறிமுறைக்குட்பட்ட கடவுள் வழிபாட்டையும் கொண்டிருந்தனர்.
பொதுவாக அக்காலத்தில் மக்கள் பிரிதொரு நிலப்பரப்பில் வாழ்கின்ற போது தளர்ச்சியான அடையாளத்தையே வெளிக்காட்டி நிற்பர். ஆனால் இவ் யூத இனமக்கள் அவ்வாறு பிரிதொரு நிலப்பரப்பிற்கு இடப்பெயர்ந்து சென்றாலும் அல்லது கைதிகளாக சென்றாலும் தமது பொதுவான அடையாளத்தை எப்போதும் வைத்திருப்பார்காள். உதாரணமாகபுராதான எகிப்தியர்களாலோ அல்லது பபிலோனியர்களால் சிறைப்படுத்தப்பட்டு அடிமையாக அந்த நிலப்பரப்பிற்க்கு சென்று வாழ்ந்தாழும் இவர்கள் தமது பொதுவான அடையாளத்தை எப்போதும் மறுக்காமல் அதனை வழக்கில் கொண்டிருப்பார்கள்.
யூதர்களுடைய கட்டுப்பாடான உடன்படிக்கையானது ஒரு சில மக்களையும் பழங்குடி தலைவர்களையும் மாத்திரம் உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையாகவல்லாமல் முழு ஈஸ்ரேலிய மக்களையும் (ஜனங்களையும்)இணைத்து மேற்கொள்ளப்பட்டவொன்றாக காணப்பட்டது.அதாவது யூத மதத்தை பின்பற்றி கர்த்தரை தமது கடவுளாக கருதிய ஈஸ்ரேலிய ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் அனைவரையும் உள்ளடக்கிய உடன்படிக்கையாக காணப்பட்டது.
இவ் யூத மக்களும் ஏனையபழங்குடி மக்கட்குழுக்களை போன்றே தம்மை குடிகளாக கருதிக்கொண்டிராத போதிலும் தமக்குள் ஒரு உறுதியான பிணைப்பினை ஏற்படுத்திக் கொண்டு ஏனைய இனத்தவர்களை பிரிதொரு குழுவாக கருதுவர். அதாவது வெவ்வேறு மதங்களை பின்பற்றுபவர்களும் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்களும் ஈஸ்ரேலிய குடிகளாக கருதமாட்டார்கள். இக்காலத்தில் குடியுரிமை என்பது ஒரு குறிப்பிட்ட இனத்தினைஅடிப்படையாக கொண்டே வழங்கப்பட்டுள்ளது
அந்தவகையில் இம் முறையானது நவீன குடியுரிமை எடுத்துக்காட்டும் ஒரே குடையின் கீழுள்ள வெவ்வேறு இன,
மத, மொழி மற்றும் பல்வேறு முறைகளால் வேறுபட்டவர்கள் அனைவரும் குடிகளேஎன்ற கருத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டவொன்றாக காணப்படுகின்றது.
Posted by
Thiviya Mihirangani BA (Hons) Political Science
University of Peradeniya
Posted by
Thiviya Mihirangani BA (Hons) Political Science
University of Peradeniya
No comments:
Post a Comment