type in English

Thursday, October 5, 2017

Citizenship


குடியுரிமை


குடியுரிமை என்பது உலகம் பூராகவும் மிக பொதுவாகவுள்ள சொற்பதமாகும். இது அரசொன்றிற்கும் குடிமகனுக்கும் இடையிலான தொடர்பை குறித்து நிற்கின்றது. தேசியத்துவம் என்ற சொற்பதமும் குடியுரிமை என்ற சொல்லும் ஒரே அர்தத்தை குறிக்கும் ஒன்றாகும்.குடியுரிமை (Citizenship) என்பது, சிறப்பாக ஒரு நாட்டின் குடிமகனாகவோ குடிமகளாகவோ இருப்பதற்கான உரிமையைக் குறிக்கும். பிரஜாவுரிமை என்பது ஒருவருக்கு கிடைக்கப்படுகின்ற சட்ட ரீதியான அந்தஸ்த்து ஆகும். அந்தவகையில் ஒருநாட்டின் குடியுரிமை பெற்ற ஒருவருக்குஅந்த நாட்டில் சட்ட பாதுகாப்பு கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது.
குடிமகன்(Citizen) என்ற தகுதி, இறையான்மையுள்ள நாட்டின் அரசியல் சட்டத்தால், கடமைகளும் பொறுப்புகளும் ஒரு நபருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு நாட்டின் குடிமகன் என்ற தகுதி அடைந்தவர்களுக்கு அந்நாட்டில் குடியுரிமை, வாழ்வுரிமை, வாக்குரிமை, வேலை செய்யும் உரிமை, சொத்துக்கள் வாங்கும் உரிமை, தான் வாழும் நாட்டின் அரசிற்கு எதிரான சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளும் அதிகாரம், வெளிநாடுகளிடருந்து தன் சொந்த நாட்டிற்கு திரும்பும் உரிமை போன்ற உரிமைகள் கிடைக்கும்.
குடியுரிமை என்பது “Civis” என்ற இலத்தின் மொழிச்சொல் “polites” என்ற கிரேக்க சொல்லிருந்து தோற்றம் பெற்றவொன்றாகும். அக்காலத்தில் இதுநகரத்தின் உறுப்பினர்என்பதையே குறித்து நின்றது.பிரஜைகள் என்போர் அறைகுறைபிரஜைகள் மற்றும் வெளிநாட்டவர்களிலிருந்து வேறுபடுகின்றனர். பிரஜைகள் என்போர் அடிப்படை உரிமைகளை தாம் கொண்டிருப்பதன் காரணமாக தாம் சார்ந்த அரசின் அல்லது அரசியல் சமுதாயத்தின் முழுமையான அங்கத்தவர்களாக உள்ளனர்.
குடியுரிமை பற்றி ஆரம்பகாலத்திலிருந்து அதாவது கிரேக்க, உரோமர் காலத்தில் இருந்தே பேசப்பட்டு வந்துள்ளது. அந்தவகையில் அரிஸ்டோட்டல் குடியுரிமை பற்றி குறிப்பிடுகையில் குடிமகன் என்பவன் ஆளுதல் மற்றும் ஆளப்படுதல் ஆகிய இரண்டிலும் பங்குகொள்பவனாவான் என்க் குறிப்பிட்டார்.
பிலக் வெல் என்பவர் குடியுரிமை என்பது முழுமையானதும் பொறுப்புமிக்கதுமான அரசின் உறுப்புரிமையை குறித்து நிற்கின்றதுஎன்றார். டேவிட் மில்லர் என்பவர்குடியுரிமை என்பது வெறுமனே உரிமைகளை கொண்டிருத்தல் என்பதல்ல எனவும் அது நம்பிக்கை மற்றும் அதன் பொதுநலனை முன்னேற்ற திடசங்கற்பம் பூண்டுள்ள சமூகத்தின் உறுப்பினரின் நடத்தைஎனக் குறிப்பிட்டார்.T.H. கிரீன்குடியுரிமையின் சாரம்சம் சமூக வர்க்கத்தினை கருத்திற் கொள்ளாது அனைவரின் நல்வாழ்வினை முன்னேற்றுவதில் உள்ளதுஎனக் குறிப்பிட்டார்.ஜேர்ஜ் பாபலொட்குடியுரிமை என்பது அரசியல் பிணைப்பின் தன்மையில் தங்கியுள்ளது அப்பிணைப்பினைப் பொறுத்துத் தான் அது எவ்வளவு வேகமானது என்பது தீர்மாணிக்கப்படுகின்றதுஎன்றார்.
குடியுரிமை ஒரு சமூகத்தினால் உருவாக்கப்படுவதுடன் மக்களுக்குரியதாகவும் அவ் உரிமைகள் தீர்மாணிக்கப்படுகின்றது. இது அரசினது அதிகாரத்தினால் தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகவும் கருதப்படும்.  இதன் உறுபினர்கள் தோற்றத்தினை அடிப்படையாக கொண்ட இடம், இனம், சமயம், பால் என்ற அடிப்படையில் பாராபட்சத்திற்கு உட்பட மாட்டார்கள்.
பல்வேறு காரணங்களால் ஒரு நபர் ஒரு நாட்டின் குடிமகனுக்குரிய தகுதியை அடைகிறார். ஒரு நாட்டின் பெற்றோர்களுக்கு பிறப்பதாலும், வேறு நாட்டின் குடியுரிமையுள்ள ஆடவனையோ அல்லது பெண்னையோ மணப்பதாலும், வம்சாவழி, இடப்பெயர்வு போன்றவற்றினால் அந்நாட்டின் குடிமகன் எனும் தகுதி கிடைக்கிறது.இடப்பெயர்வு எனப்பார்க்கும் போது தொழில்வான்மை சார் இடப்பெயர்வு உதாரணமாக அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் வேலைவாய்ப்பு தேடி வரும் ஊழியர்களுக்கு Skill Migration எனும் தகுதிசார் குடியுரிமையை வழங்குகின்றனர்.  இயற்கை அனர்த்தங்களால் இடம்பெயர்ந்து செல்லவதால், உள்நாட்டு குழப்பங்கள் காரணமாக இடம்பெயர்தல் போன்றவற்றினாலும் குடியுரிமை கிடைக்கப் பெறும். உதாரணமாக இலங்கையில் சிவில் யுத்தத்தின் போது பல இலங்கை தமிழர்கள் ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு அகதிகளாக குடிபெயர்ந்து சென்றனர். தற்போது அம்மக்கள் அந்தந்த நாடுகளின் குடியுமையைப் பெற்று அந்நாட்டவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.
குடியுரிமையின் மையக்கரு அரசியல் சமூகத்தில் பங்கேற்பு செய்வதாகும். எனினும் குடியுரிமை பற்றிய எந்த ஒரு வரைவிளக்கனமும் குடியுரிமையின் அபிவிருத்திக்கு அரசின் வகிபாகம் முக்கியம் என்பதை மறுப்பதில்லை. ஏனெனில் குடிகளின் நிலைமைகள் அரசினுள் காணப்படும் சட்ட ஏற்பாடுகளால் நிர்ணயிக்கப்படுகிறது.
நவீனக்குடியுரிமையின் அறிமுகவாளரான T.H. மார்ஷல் என்பவர் தனது பிரஜாவுரிமை மற்றும் சமூக வகுப்பு என்ற கட்டுரையில்குடியுரிமை எனப்படுவது ஒரு சமூகத்தினது முழுமையான உறுப்புரிமையை குறிக்கின்றது எனவும் இதில் அவர்களதுநிலையானது சமத்துவமானதாகவும் நம்பிக்கைக்குறிஅதாகவும் உரிமைகள் மற்றும் கடமைகள் காணப்படுவதுடன் இது அகில ரீதியான கொள்கையாகவும், இதில் பிரஜா உரிமயாகவும் பொதுவாக தேவைபாடுகளையும் உரிமையாகவும் கடமைகளாகவும் காணப்படும். இது சாத்தியமாகக் கூடியதானது.
T.H Marshall
 அரசினது பிரஜைகள் என்ற ரீதியில் வாழ்கின்ற சில குழுக்கள் திருப்தியடைகின்ற போது தான் அவர்களுடைய உரிமைகள் பெறுமதிமிக்கதாக இருப்பதுடன் அவர்கள் அவ் அரசின் பிரஜைகளாக மட்டும் இருக்க வேண்டும் என்பதனை குறித்து நிற்கின்றது. அதே போன்று சில உரிமைகள் நடைமுறையில் மறுக்கப்பட்ட ஒன்றாக காணப்படுகின்றது. இதன் போது இந்தக் குழுக்கள் தமக்கு மீறப்படும் உரிமைகளை சமூக இயக்கங்கள் மூலம் வென்றெடுக்க முயல்கின்றனர். உதாரணமாக அமெரிக்காவின் சிவில் உரிமை இயக்கம், ஐரோப்பாவின் Working Last Momment, தென் ஆபிரிக்காவின் கருப்பின இயக்கம் போன்றவற்றை குறிப்பிடலாம்.இவ்வாறான குழுக்கள் பொதுவாக அரசியல் பங்குபற்றலை எதிர்பார்கின்றது. அதாவது வாக்களித்தல், அமுக்கக் குழுக்களாக தொழிற்படுதல், ஊர்வலங்கள் மற்றும் பேரணிகள் நடாத்துதல், ஏனைய அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுதல் போன்றனவாகும்.

உண்மையில் பிரஜா உரிமை என்ற எண்ணக்கருவானது கடமைக்கான உணர்வு என்பதை வலியுறுத்துவதுடன் உரிமைக்கான கேள்வியானது. அதன் பின்புலத்திற்கு குறைந்த முக்கியத்துவத்தினை வழங்குகின்றது. ஆனால் சமகால சமூகத்தில் பிரஜாவுரிமையானது உறுதியான உரிமைகளை அடிப்படையாக கொண்டது. தற்காலத்தில் குடியுரிமை என்பது ஒரு குறிப்பிட்ட அரசியல் சமூகத்தில் அல்லது அரசின் உறுப்பினராக இருப்பதை குறித்து நிற்கின்றது. இவ்வகையில் வாக்களிக்கும் உரிமை, வரிச்செலுத்தும் கடப்பாடு போன்ற சட்டத்தில் வரையறுக்கப்படும் உரிமைகளை மற்றும் பொறுப்புக்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

Posted by
Thiviya Mihirangani BA (Hons) Political Science 

University of Peradeniya

No comments:

Post a Comment

NATO

நேட்டோவின் தோற்றம் மற்றும் வளர்ச்சி   நேட்டோ அரசு சார் பிராந்திய அமைப்பாகும் . 4 ஏப்ரல் 1949 ஆம் ஆண்டு இரு வட அமெரிக்க மற்றும...